பக்கம்:ஐந்திணை வளம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 43 மனத்திற் கொண்டு துடிக்கின்றது நியாயமா? அதனால் நின் உள்ளத்துக் குமுறலை மறந்திரு” இப்படிக் கூறித் தலைவிக்கு ஆறுதல் உண்டாக்க முயற்சிக்கின்றாள் தோழி. தலைவியோ, “தன்னைப்போல எவருமே வருந்தினவரில்லை" என்று மீளவும் தன்னுடைய வேதனை மிகுதியைக் கூறிப்புலம்புதற்குக் தொடங்குகின்றாள். "தோழி! நம் அழகனைத்தும் வாட்டமுறுமாறு நம்மைத் தனியே விட்டுச் சென்றவர் நம் காதலர். அவர், நம்பால் வந்து சேர்வதற்கு முன்பாகவே, கரிய கொடியினையுடைய முல்லையானது. நம் பற்களைப் போன்ற முகைகளைத் தோற்றுவித்துள்ளது. 'அது மட்டுமன்று கார் முகிலோடு ஒன்றுகூடி வந்து நம்மை வருத்துகின்ற மாலைக்கு, எம்மைப்போல அறியாமைப்பட்டு வலியிழந்து மெலிவாற்றியிருந்து உயிர் வாழ்பவர் யாருமே இல்லை. - துயரத்தினது மிகுதியால், 577 உயிர்விடாதிருக்கின்ற நிலையினைச்சொல்லி,இப்படிப்புலம்புகின்றாள் தலைவி. காரிகை வாடத் துறந்தாரும் வாராமுன் கார்க்கொடி முல்லை எயிறீனக்-காரோடு உடன்பட்டு வந்தலைக்கும் மாலைக்கோ எம்மின் மடம்பட்டு வாழ்கிற்பார் இல். "எம்மின் வாழ்கிற்பார் இல்’ என்பது. கற்புச் செவ்வியரான பிற மாதர்களாயின், இங்ங்னம் வாழ்ந்திரார்' என்பதாம். அதனால், ‘மாலைக்கு எம்மினும் மடம்பட்டு வாழ்கிற்பாரான வேறு துணையுடையார் இல்லை' எனப் புலம்பலின் சோககீதத்தை எழுப்புகிறாள் தலைவி. 8. வான் விற்கோலிற்று தலைவியும் தோழியும் இப்படித் துயரவெள்ளத்திலே நீந்திக் கரைகாண இயலாதபடியாகத் தவித்துக் கொண்டிருந்தனர். மாலைக்காலமும் வந்து சூழத் தொடங்கிற்று. அப்போது, தெருவிலேயிருந்து இனிதான புல்லாங்குழலின் இசையொலி காற்றொடு மிதந்து வந்து கொண்டிருக்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/51&oldid=761853" இலிருந்து மீள்விக்கப்பட்டது