பக்கம்:ஐந்திணை வளம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - 45 9. நில்லா வளை தலைவியின் உள்ளத்தே நிலவிய கொடிதான துயரச் சுமையினைத் தோழியும் மிகமிக நன்றாக அறிந்துகொண்டாள். எனினும் அவள் எப்படியாவது தலைவன் வரும் வரைக்கும் அவளை ஆற்றியிருக்குமாறு செய்வதற்கே விரும்பினாள். அதனால், மீண்டும் தேறுதல் மொழிகள் சிலவற்றைச் சொல்வாளானாள். e அப்பொழுது தலைவி, தான் கொண்ட துயரத்தினை வாய்விட்டு உரைக்கவும் இயலாதவளாகத், தன் கைகளைத் தோழியின் முன்பாக நீட்டுகின்றாள்.தோழி திடுக்கிடுகின்றாள். 'ஏனடி நின் கைகளிற் கிடந்த வளையல்கள் எல்லாம் எங்கே?' என்று பதற்றத்துடன் கேட்கின்றாள். நீண்டதொரு பெருமூச்சுக்குப்பின்னர்த்தன்நிலைமையைச்சொல்லுகின்றாள், தலைவி. "தோழி வானம்மிக்கமுழக்கத்துடனே மழைபெய்தலை மேற்கொண்டு கார்காலத்தையும் கொண்டுவிட்டது. அதனைக் காணக்காணத் தனிமைத் துயரமும் என்னை அழுத்துகின்றது. என் கையிலிருந்த வளையல்களுள் ஒன்றேனும் எஞ்சி நில்லாவாய் எல்லாமே கழன்று வீழ்ந்தன. - "தவளைகளைப் போன்று ஒலிக்கின்ற மணிகள் அமைந்த கழுத்து மாலையினையுடைய, குதிரைகள் பூட்டப் பெற்ற தேரின் மேல் ஊர்ந்தவராக, நம் காதலர் இன்றும் நம் துயரத்தைப் பொறுத்துக் கொள்ளும்படியாக வராது விட்டுவிடுவாரோ?” 'அன்றாவது தலைவன் வரவேண்டும்’ என விரும்புகின்றவள், ‘இன்றும் வராது போய் விடுவாரோ? எனத் தோழியிடத்தே கேட்கின்றாள். தலைவியின் துயரம் எவ்வளவு மிகுதியானது என்பதனைக் காட்டும் செய்யுள் இது. தேரைத் தழங்குகுரல் தார்மணி வாயதிர்ப்ப ஆர்கலி வானம் பெயல்தொடங்கிக்-கார்கொள இன்றாற்ற வாரா விடுவார்கொல் காதலர் ஒன்றாலும் நில்லா வளை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/53&oldid=761855" இலிருந்து மீள்விக்கப்பட்டது