பக்கம்:ஐந்திணை வளம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 49 12. படுமழை கொல் தோழியர் இருவரும் இப்படித் தம்முள் பேசித் துன்பத்தை ஆற்றுவதற்கு முயன்றுகொண்டிருந்தவேளையிலே, ஆயன் ஒருவன் தெருவூடுஆநிரைகளை ஒட்டிக்கொண்டுவந்து கொண்டிருக்கின்றான். மாலை வேளையின் மகிழ்வோடு அவனுடைய உள்ளம் களிதுள்ள, அவன் வந்து கொண்டிருந்த அந்தக் காட்சியை, அவர்கள் இருவரும் காணுகின்றனர். குருந்த மலரினாலே தொடுக்கப்பட்ட அசைகின்ற பெரிய தழைமாலையினைச் சூடியவனாக அவன் வருகின்றன். அந்தப் புதுமலர்களிலே தேனுண்ணும் விருப்போடு வண்டினங்கள் அதனைச் சூழ்ந்தவையாக ஆரவாரித்துக் கொண்டு வருகின்றன. தன் பின்னால், ஆநிரைகள் வீடுகளை நோக்கிக் குதுகலத்தோடு வந்து கொண்டிருக்க, நிமிர்ந்த நடையோடு கொன்றையந் தீங்குழலினை வாய்வைத்து ஊதி இன்னிசைஎழுப்பியவனாக அவன் வருகிறான். அவனைத் தோழிக்குக் காட்டித் தலைவி கூறுகின்றாள். தெரிந்த அணிகளைக் கொண்டவளே! அந்த ஆயனது வருகையைக் காணடி இந்த நேரத்திலே, அவன் பின்னோடு நின்று பொழிகின்ற பெருமழைபோலும், என்னோடு பகைத்து இந்தத்துன்பத்தை விளைக்கும் வகையினைச் செய்வது? என்று சொல்லிச் சோர்கின்றாள். - - தோழிக்கு விடைசொல்ல நாவெழவில்லை. தலைவியையும் இடையனையும் வானத்தையும் நோக்கிநோக்கி அவளும் தளர்கின்றாள். குருந்தலை வான்படலை சூடிச் சுரும்பார்ப்ப ஆயன் புகுதரும் போழ்தினால் ஆயிழாய்! பின்னொடு நின்று பெயரும் படுமழைகொல் என்னொடு பட்ட வகை. - ஆயன் வருகின்ற அருமையான அந்தக் காட்சியைக் காட்டுகின்ற சொற்கள் எவ்வளவு பொருள்பொதிந்த சொற்களாக அமைந்துள்ளன என்பதனைக் காணுங்கள். அவன் குருந்த மலர் மாலையினைத் தன் கழுத்திலே சூடிக் கொண்டவனாகக் களிப்புடன் வருகின்றான். அந்த மாலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/57&oldid=761859" இலிருந்து மீள்விக்கப்பட்டது