பக்கம்:ஐந்திணை வளம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45giâ €ಹಕಿಹ67 51 3. பாலை வளம் பாலைத் திணையோடு ஒட்டியவாகப் பழந்தமிழ் இளைஞரிடையேயும் கன்னியரிடையேயும் எழுகின்ற உள்ளப் போராட்டங்களை உரைக்கும் பகுதி இது. அன்பின் ஐந்திணை என வழங்கும் ஒழுக்கத்துள், பாலையாகிய ஒழுக்கம் மிகவும் சிறப்புடையது ஆகும். காதலர்களுடைய உள்ளத்திலே நிலவுகின்ற ஆர்வப் பெருக்கினை, அவர்கள் கூடியிருக்கும்போது காண்பதினும், பிரிந்திருக்கும்போது காண்பதுதான், அவர்களைப் பற்றிச் சரியாக மதிப்பீடு செய்வதற்கு உதவுவதாக இருக்கும். பிரிவினாலே தலைவியின் உள்ளத்தே நிறைகின்ற பெருந்துயரமும், அதனால் அவள் உடல் மெலிதலும், உள்ளம் சோர்தலும் எல்லாம், நமக்கு அவளது காதற் பெருக்கத்தையும் கற்புத்திண்மையையும் தெளிவுறக்காட்டுவனவாகும். - வளமற்றதும், வறட்சி மிக்கதும், வெம்மையின் கொடுமையால் வெந்து கொண்டிருப்பதும் பாலைநிலத்திற்கு உரித்தான பண்புகள்.அதனைக் கடந்தேவேற்றுநாடுபோகின்றவன் தலைவனாதலாலும், அவனைப்பிரிந்த அவள், அவன் அதனை எப்படிக் கடந்து போவானோ என்றே நினைத்து நலிதலாலும், இந்த ஒழுக்கம் இப்பெயரினைப் பெற்றதுபோலும். வளமற்ற பகுதியாதலால், இதன்கண் வாழ்வோர் பிற நிலத்தவரைப் போன்று விளைத்துண்டும் வேட்டையாடிக் கிடைப்பவற்றைத்தின்றும் வாழ்பவராக அமையாது, வழியிடை வருவாரான பிற நிலத்தவரைக் கொன்று கொள்ளையிட்டும், அடுத்திருக்கும் பிறநிலப்பகுதிகளிற் புகுந்துகொள்ளையிட்டும் வாழ்கின்ற தன்மையினராகவே இருந்தனர். இதனால், இவர்களிடையே, பிறரை விருந்துட்டிப் பேணுகின்ற தன்மை ஏற்படாது. அவரைக் கவர்ந்து பயன்கொள்ளவும், அவரை ' கொன்று கொள்ளையிடவும் கூடிய மனநிலையே உருவாகி விளங்கியது. இத்துடன், பாலையென்பதும் முல்லை குறிஞ்சி என்பனவேனிலின் கொடுமையால் தம்நிலைதிரிந்து கிடக்கும் பகுதியே ஆதலால், கொடு விலங்குகளும் அப்பகுதிகளில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/59&oldid=761861" இலிருந்து மீள்விக்கப்பட்டது