பக்கம்:ஐந்திணை வளம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் , 53 'தோழி! நம் தலைவர் மிகமிகப் பெருந்தன்மையாளர். அத்துடன் சிறந்த தகுதியினையும் உடையவர் அவர். அவருடைய ஊக்கத்திற்குப் பொருத்தமாகவே இப்பொழுது அரும்பொருள் தேடிவருதலில் அளவற்ற விருப்பம் , உடையவராக இருக்கின்றனர்.” . "இறந்தோரது பீடும் பெயருமாகியன எழுதப்பட்டு விளங்குவன நடுகற்கள். இதனை நீயும் அறிவாய். இவை வரிசையாக நடப்படுவதற்குக் காரணமாகிய சிறப்புடன், அம்பினைத் தொடுக்கின்ற செயலினையும் செய்பவர்கள் பாலைப்பகுதியின் வீர மறவர்கள். அவர்கள் தமக்கும் மாறுபட்டவர்களை வருத்துவதற்கு இடமாகிய பாலை வழியினைப்பற்றியும் நீகேட்டிருப்பாய். “நின் காதலரது பெருவிருப்பம் எல்லாம், இப்பொழுது அத்தகைய பாலை வழியிலே பொருள் தேடிவரச் செல்லுதலிலேயே இருக்கிறது என்கிறாள். தோழியின் பேச்சு, தலைவனின் பிரிவினைப் பற்றிக் கூறுவதையும், அதனால் தான் வருத்தம் உறாதபடிக்கு மறைமுகமாகச் சொல்லப்படுவதையும், தலைவி உணராமல் இல்லை. அவளுடைய சுடுமூச்சு அவள் அதை உணர்ந்ததும் அடைந்த சோகத்தை வெளிப்படுத்திற்று. எழுத்துடைக் கன்னிரைக்க வாயில் விழுத்தொடை அம்மா றலைக்குஞ் சுரநிரைத் தம்மா பெருந்தகு தாளாண்மைக் கேற்க வரும்பொருள் ஆகுமவர் காதல் அவா. வரும்பொருளிலே செல்லுகின்ற தலைவனது அவாவினைப் பிழையுடையதென்று எவராலும் கூறமுடியாது. இதனைத் தோழியும் உணராமலில்லை. அதனால்தான், அது தலைவனின் பெருந்தகு தாளாண்மைக்கு ஏற்கவே அமைவது என்கின்றாள். சுரத்தின் கொடுவெம்மையை எழுத்துடைக் கன்னிரைத்த வாயில் விழுத்தொடை அம்மாறு அலைக்குஞ் சுரம் எனக் கூறினள். அதனைக் கடந்து போதற்குத் தலைவன் முற்படுதல் அவனுக்கே மிகவும் ஆபத்தானது என்பதனையும், அதனால் அதனைக் கைவிடுமாறு அவனைத் தூண்டுதலே சிறப்பானது என்பதனையும், தோழி குறிப்பாகத் தலைவிக்கு இப்படி உணர்த்துகின்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/61&oldid=761864" இலிருந்து மீள்விக்கப்பட்டது