பக்கம்:ஐந்திணை வளம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் ! 55 வில்லுழுது உண்பார் கடுகியதரலைக்கும் கல்சூழ் பதுக்கையா ரத்தத்திற் பாரார்கொல் மெல்லியல் கண்ணோட்டமின்றிப் பொருட்கிவர்ந்து நில்லாத உள்ளத் தவர். தலைமகன், தன்னைப் பிரிந்து செல்வதற்கு மனம் இசையாத தலைவி தன்பால் வந்து பிரிவினை உணர்த்திய தோழிக்கு, இப்படித் தன் மனநிலையைக் கூறுகின்றாள். தன்னைப்பிரிக்கின்றான் என்பதிலும்,அவன்செல்லும்வழியது ஏதத்தையே நினைந்து பெரிதும் கவலைப்படுகின்ற தலைவியின் உள்ளச்செவ்வியினை, நாமும் உணர்ந்துபோற்றுதல் வேண்டும். 3. வாழ்தியோ உயிரே! தலைவன், தன்னுடைய முடிபின்படியே தலைவியைப் பிரிந்து பொருள்தோடி வருதலின் பொருட்டாகச் சென்று விடுகின்றான். அவனுடைய அந்தச்செயலை நினைக்கநினைக்க தலைவியால் தாங்கிக் கொள்ளவே முடியாத பெருந்துயரம் உண்டாகின்றது. அவளுடைய இன்ப வாழ்வைப் பற்றி அவள் கட்டியிருந்த கோட்டைகள் பலப்பல. அவையெல்லாம் படபட எனச் சரிந்துவிட்டன போலவே அவளுக்கு அப்போது தோன்றுகின்றது. பொருள்மேற் சென்ற தலைவன், பொருளைத் தேடிக் கொண்டதும் மீளவும் வந்து தன்னோடு கூடியிருப்பான் என்ற நம்பிக்கையோ, அவனோடு மீளவும் தன் வாழ்வு மலரும் என்ற நம்பிக்கையோ அவள்பால் நிலைபெறவே இல்லை. அத்துடன் அவளுடைய வாழ்வின் மீதும் அவளுக்கு ஒருவித வெறுப்பு ஏற்பட்டுவிடுகின்றது. . . தன்னைத்தனியே வாடியிருக்கும்படியாகவிட்டுவிட்டுத் தான் பொருள்தோடி வருதலின் பொருட்டாகத் தலைவன் போயுள்ளானே! அதுதான் பாதுகாப்பாகத் திரும்பி வருதற்குரிய வழியினை உடையதாகவாவது இருக்கிறதா என்றால் அதுவுமில்லையே! அவனைப் பிரிந்திருப்பதனால் வந்துறுகின்ற காமவெம்மை ஒருபுறம்தன்னைவாட்டிவதைக்க,மற்றொருபுறம் அவன் சென்ற வழியினது கொடுமையைக் குறித்த எண்ணங்கள் தன்னைக் கலங்கித் துடிக்கச் செய்ய, அவள் உள்ளம் பெரிதும் வேதனைப்படத்தொடங்கியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/63&oldid=761866" இலிருந்து மீள்விக்கப்பட்டது