பக்கம்:ஐந்திணை வளம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 - ஐந்திணை வளம் களிற்றியானை, தன் பிடியினோடுங் கூடியதாகக் கிடந்து உறங்கிக் கொண்டிருக்கும். அத்தகைய தன்மையினைக் கொண்டது கானம். ‘மேலும், வெம்மையின் கொடுமையானது எரிகின்ற நெருப்பினைப் போல் விளங்கி மயக்கத்தை உண்டாக்கும் - தன்மையதாகவும் அக்கானம் விளங்கும் என்பார்கள்: அத்தகைய கானத்தின் வழியாக நீ செல்லப் போகின்றதான செய்தியைத் தலைவியிடம் சென்று சொல்லுமாறு எனக்குக் கூறுகின்றனை. அதனை நான் உரைத்தால், செவ்வரி கருவரிகள் கலந்து தோன்றும் மையுண்ணும் தலைவியது கண்களுள், நீரானது அடங்கி நில்லாதாகி வெளிப்போந்து கொட்டுதலையும் - தொடங்குமே! - அங்ங்னமாக, எங்ங்னம் யான் சென்று சொல்லுவேன்? அதனால், நின் செலவினைக் கைவிட்டு அமைதலே நினக்குச் செய்தற்கு உரியதாகும் என்கின்றாள். தோழியின் நயமான இந்தச் சொற்களைச் செய்யுள் அருமையாக எடுத்துக் காட்டுகின்றது. - பொரிபுற வோமைப் புகர்படு நீழல் வரிநுதல் யானை பிடியோடு தூங்கும் எரிமயங்கு காணஞ் செலவுரைப்ப நில்லா வளிமயங்கு உண்கண்ணுள் நீர். செலவினை உரைப்பவே கண்கள் நீரைச் சொரிதலைத் தொடங்குமாயின், செலவு நிகழின் அவள் நிலைதான் யாதாகுமோ? ஆதலின், செல்லுதலைத் தவிர்க’ என்றும் வலியுறுத்துகின்றாள் தோழி. - 10. இறந்தார் கொல் 'தான் பிரிந்து போதலால், தலைவி பெரிதும் துயரினுக்கு உள்ளாவள் என்பதனைத் தோழி கூறியதும், அதனைத்தானும் அறிந்தானாகிய தலைவன், தன்னுட்ைய கடமையின் பொறுப்பினை மேலும் அவளுக்கு எடுத்தியம்பி, எப்படியும் தலைவியை ஆற்றியிருக்கச் செய்தல் வேண்டுமெனத்தோழியை இரந்து நிற்கின்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/74&oldid=761878" இலிருந்து மீள்விக்கப்பட்டது