பக்கம்:ஐந்திணை வளம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - 67 அவனது நிலையினை உணர்ந்து அவளும், ஒருவாறு மனம் தேறியவளாக, அவனுடைய கருத்திற்கு இசைகின்றாள். தலைவியிடம் சென்று, செய்தியைப் பக்குவமாகச் சொல்லுதலையும் செய்கின்றாள். - தோழியின் சொற்களைக் கேட்டதும், தலைவியின் உள்ளம் பெரிதும் பதறுகின்றது. தான் அதற்கு உடன்படாத தன்மையினை அவள் உரைக்கின்றாள். தோழி பிற விலங்குகளைத் தனக்கு உணவாகப்பற்றிக் கொள்ளுதலிலே வல்லதும், வளைந்த வரிகளை உடையதும், நல்ல வெற்றிச் சிறப்பினை உடையதும், விலங்கினத்தைச் சேர்ந்ததுமான புலியினது கூட்டங்கள் கூடித் திரிகின்ற இயல்பினையுடையது காடு என்பார்கள். 'பூக்கள் வீழ்ந்து அமைந்த புதர்களையுடையதும் அக் கானம்' என்பார்கள். 'நம் தலைவர் தலைமைப் பாட்டினைக் கொண்டவர்; வலிமையான் மிக்கவர்; முயற்சியினிடத்தே மிகுதியாகக் கொண்ட ஆசையின் காரணமாக எனக்கு நன்மை தருவது எது வென்பதனை உணராதவராகி, என்னை விட்டுப் பிரிந்தும் போயினரோ? t 'அவர் போகார்; போயினால், எனக்குத் தீதாகவே முடியும் என்பதனையும் தலைவி குறிப்பாகக்கூறுகின்றனள். கோள்வல் கொடுவரி நல்வயமாக்குழுமும் தாள்வீபதுக்கைய கானம் இறந்தார் கொல் ஆள்வினையின் ஆற்ற அகன்றவர் நன்றுணரா மீளிகொள் மொய்ம்பின் அவர்? 'என்னோடு இன்புற்றிருக்கின்ற செயலினை மறந்து ஆள்வினையின் அவாவினாலே கொடுமையுடைய கானத்திடத்தும் சென்றாரோ? எனத் தலைவி,தோழிக்கு உடன் படாத, தன்னுடைய உள்ளத்தைப் புலப்படுத்துகின்றாள். ‘தாள்வீபதுக்கைய கானம் என்பதனோடு, சிலம்பினுள் வரும், 'மண்பக வீழ்ந்த கிழங்ககழ் குழியைச் சண்பகம் நிறைந்த தாதுசோர் பொங்கர், பொய்யறைப் படுத்துப் போற்றா மாக்கட்குக், கையறு துன்பம் காட்டினும் காட்டும் (சிலம்பு 10: 6871) என்பதனையும் கருதுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/75&oldid=761879" இலிருந்து மீள்விக்கப்பட்டது