பக்கம்:ஐந்திணை வளம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 - ஐந்திணை வளம் 11. இறப்பர் கொல் தலைவியின் பேச்சைக் கேட்டதும் தோழியின் உள்ளம் பெரிதும் கலங்குகின்றது. இறந்தார் கொல் என ஐயுற்றுப் புலம்பும் அவளது ஐயத்தைப் போக்குவாளாக, 'அவர் போகவில்லையடி, போவதற்கு விரும்புகின்றார் அவ்வளவுதான் என்கின்றாள். ‘போவதற்கு விரும்பினார்’ என்றதால், தலைவியின் உள்ளம் அமைதி பெற்றுவிடவில்லை. அவள், தலைவன் பால் அந்த எண்ணம் தோன்றியதனை நினைந்தும் பெரிதும் வாட்டமுற்றுப்புலம்புகின்றாள். தலைவியின் அந்த நிலையினைக் காட்டுவது இந்தச் செய்யுள். 'தோழி' 'வளைந்த கோடுகளை உடையது புலி, அது பாய்ந்து கொல்லுதலினாலே தன் துணையினைப் பறிகொடுத்தது ஒரு களிறு, அந்தக்கொடுமையினைக் கண்டதும் அதற்கு அச்சமும் ஏற்பட்டது. மாவிலங்குமரங்கள் வெயிற் கொடுமையால்வற்றிப் போயினவாய் நிற்கின்ற, பாறைகளுக்கு இடையே அமைந்த வழியிடத்தே சென்று, அந்த வழியை அடைத்துக் கொண்டதாகத்தன்துணையைக்கொன்ற புலியினது வரவினை எதிர்பார்த்துச் சினத்தோடு அது நின்றது: 'இப்படிக் களிறு வழியடைத்துச் சினத்தோடு நிற்கின்ற தன்மையினையுடைய, பாலை நிலத்து நீண்ட பாறைகளைக் கொண்ட வழியிடத்தே, நம்மைப் பிரிந்து நம் காதலர் கடந்து செல்பவரும் ஆவாரோ? தலைவி இவ்வாறு உரைக்கின்றனள். அவர் போகார்’ என வுரைத்து, அவரதுபோக்கிற்கு உடன்படாத தன் நிலையை விளக்கும் தலைவியின் கருத்தினைத் தோழியும் கேட்டு அறிகின்றனள். அவள் உள்ளமும் அதனை ஏற்றதாக, அவளும் தலைவியின் கருத்திற்கு ஆதரவாக அமைதலையும் செய்பவளாகின்றாள். கொடுவரி பாயத் துணையிழந்து அஞ்சிக் கடுவுணங்கு பாறைக் கடவு தெவுட்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/76&oldid=761880" இலிருந்து மீள்விக்கப்பட்டது