பக்கம்:ஐந்திணை வளம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 69 நெடுவரையத்தம் இறப்பர்கொல் கோண்மாப் படுபகை பார்க்குஞ் சுரம். 'துணையிழந்த காரணத்தால் கொடுஞ்சினமுற்றுப் பகையினை எதிர்பார்த்திருக்கும் களிற்றது பாசமிகுதியை உரைத்தவள், அதனால் அவ்வழிச்செல்லல் தலைவனுக்கு ஊறு நேர்வது எனத் தான் அஞ்சுவதையும், தன்னைப் பிரிவின் வெம்மையாகிய பகையிடத்துப்பட்டு உயிரிழக்காதபடி தலைவன் பேணுதல் வேண்டுமென்று விரும்புவதனையும், நயமாக உரைக்கின்றனள். 12. கன்னியர் போலும் தலைவி, பிரிவினை நினைந்து வருந்தினாளாகப் பற்பல நொந்து கூறியும், கண்ணிர் சோரக் கவினழிந்தும், தன் செலவினைத் தடுக்க முயன்றாலும், தலைவன்தன் ஆண்மை மிகுதியாகச் செலுத்தத் தன் போக்கினை மேற்கொண்டான். கார்காலத்தின் தொடக்கத்தே தான் தவறாது திரும்பி வந்துவிடுவதாகவும் கூறிச் சென்றான். அவனது பிரிவினாலே வந்துற்ற தனிமைத் துயரினைப் பொறுக்கலாற்றாது புலம்பினும், அவன் மீண்டுவருகின்ற நாளினை எதிர்பார்த்தவளாக வாட்டமுற்று இருக்கின்றாள் தலைவி. அவன் வருவதாகக் குறித்த காலம் நெருங்க நெருங்க அவளது ஆற்றாமையும் மிகுதியாகின்றது. - தலைவியது மிகுதிப்பட்டு வருத்துகின்ற தனிமைத் துயரினைக் கண்டு தானும் மனம் கலங்கியவளாகிய தோழி, அவளுக்குப் பலவும் கூறித்தேறுதல் உரைத்திருக்கின்றாள். ஒரு நாள் இரவுப் போதிலே, மன்றத்து முதுமரத்திலிருந்து ஆந்தை அலறுகின்ற குரல் அடுத்தடுத்துக் கேட்கின்றது. அதனை நன்னிமித்தமாகக் கொண்டு, தலைவன் விரைவில் திரும்பிவருவான்’ என்று கூறித் தேற்றுகின்றாள் தோழி. 'தலைவி மன்றத்திடத்தே இருக்கும் பழைய மரத்தினி ன்றும் ஆந்தையானது குரலெடுத்து ஒலிமுழக்குவதனைக் கேளாய்! நமக்கு அடுத்தடுத்துத் தும்மல் தோன்றுவதனையும் காணாய்! ஒள்ளிய அதன் குறிப்பினையும் ஒராய்! 'மலையிடத்தை நெருங்கிச் சென்று, பாலை நிலத்து ஊர்கள் பலவற்றையும் கடந்து, பொருள்தேடி வருதலின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/77&oldid=761881" இலிருந்து மீள்விக்கப்பட்டது