பக்கம்:ஐந்திணை வளம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 ஐந்திணை வளம் - பொருட்டாகச் சென்றவர் நம் தலைவர். களவுக் காலத்தே இரவுக்குறியிடத்துஏதங்கள் பலவற்றையும்கடந்துவந்துநம்மை இன்புறுத்திய அவர் அவ்வாறே இன்றிரவும் வந்துவிடுவார் போலும் அதனால்,நீஆற்றியிருப்பாயாக’ என்கின்றாள். மன்ற முதுமரத்து ஆந்தை குரலியம்பக் குன்றகம் நண்ணிக் குறும்பிறந்து சென்றவர் கள்ளிய தன்மையர் போலும் அடுத்தடுத்து ஒள்ளிய தும்மல் வரும். 'தும்மலும், ஆந்தையின் குரலும் எதிர்பார்ப்பவர் விரைவிலே வந்துவிடுவர் என்பதற்கான அறிகுறிகள்’ என்ற மரபினை இதனாற் காண்க. குறும்பு, பாலைநிலத்துச் சிற்றுார். 13. பல்லி படும் ! இப்படிச் சொல்லிய தோழி, தலைவி ஆர்வமுடன் தலைவனின் வரவினைத் தான் எதிர்பார்த்தவளாகத் தன் கவலையை மறந்து, தன்னைப் பூசியும் புனைந்தும் ஒப்பனை செய்து, அவனைக் காணுதற்குத் தயாராவதிலே ஈடுபடுவாள் என்று கருதினாள். ஆனால், தலைவியோ அங்ங்னம் எதனையும் மேற்கொள்ளவில்லை.தன்பால்நம்பிக்கையே கால்கொள்ளாத நிலையில், 'தோழி! என் மேல் இரக்கங் கொள்ளுகின்ற தன்மை உடையவளான நீ இப்படிஎதை எதையோ சொல்லி என்னைத் தெளிவிக்க நினைக்கின்றாய். ஆனால், யானோ அத்தகைய நல்லூழ் இல்லாதவள் இருந்தால், அவர் என்னைத் தனித்து வாடுமாறு கைவிட்டுப்போவதே நிகழ்ந்திருக்காதே? என்கின்றாள். அப்பொழுது தோழி, மீண்டும் தோன்றுகின்ற நன்னிமித்தங்களைக் கூறுவாளாகத் தலைவியின் துயரினை மாற்றுவதற்கு முயல்கின்றாள். 'தோழி! நம் அழகிய கண்கள் இடப்புறமாகத் துடிக்கின்றன. நம் கனவுகளும் நல்லனவாகத் தோன்றுகின்றன. நம் மென்மையான தோள்களும் உயரிய குன்றுகளைக் கடந்து சென்ற அவரை நினைப்பவும், பூரிப்பினைக் கொண்டு அழகு பெறுகின்றன. நாம் கொண்டநோய் தீரும்படியாகப் பல்லியும் நம் பக்கமாக நன்னிமித்தம் சொல்லுகின்றது. இவை எல்லாம் கண்டும் நீ வாடுதல் முறையன்று. அவர் விரைவிலேயே வந்து விடுவார் என்கின்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/78&oldid=761882" இலிருந்து மீள்விக்கப்பட்டது