பக்கம்:ஐந்திணை வளம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

N 74 ஐந்திணை வளம் 4. மருத வளம் மருத நிலத்தவரின் மாண்புசால் இன்ப வுறவினை வகுத்துக் கூறுகின்ற சிறந்த பகுதி இது. மருதநில நாகரிகம்,தமிழர் நாகரிகத்திலே ஒருவகையில் செழுமையுடைய நாகரிகமாகப் பண்டைக் காலத்திலிருந்தே விளங்கிவருகின்றது. மருதநிலத்தவர்கள் வளமான வாழ்வினை உடையவர்களாக இருந்ததும், நிலம் செழுமை குன்றாது பெருவிளைவைத் தந்து அவர்களைச் செல்வர்களாக்கி உயர்த்தியதும் இதற்கொரு காரணமாக இருக்கலாம். வான் மழை தவறாது பொழிதலும், நீர்வளம் மல்கியிருத்தலும் இந்த மருதப் பகுதியின் செழுமைக்குரிய சிறப்பான காரணங்களாக இருந்தன. இவற்றுடன் பயிரிடுவதற்காக உழைக்க வேண்டிய பருவகாலம் தவிரப் பிற காலங்களில் உழைக்க வேண்டிய தேவையும் இந்த நிலத்தவர்களிற் பெரும்பாலோருக்கு இல்லாதிருந்ததனால், இவர்கள், அங்ங்னம் ஒய்வுற்றிருந்த காலங்களிலே, தங்களுடைய எண்ணங்களைக் கவின்கலைத் துறைகளினும், மற்றும் பற்பல சிந்தனைகளிலும் செலவிட்டு வருவாராயினர். இங்ங்னமாக உழைக்குங்காலம் கொஞ்சமாகவும் பெற்றபயனை அநுபவிக்கும்காலம்மிகுதியாகவும்அமைந்ததனால் உழைப்பினும் அனுபவரசனையே இந்நில மக்களைக் கவியத் தொடங்கிற்று. இங்கும்,பெருநிலப்பரப்பிற்குச்சொந்தக்காரராகத் தலைமைப் பொறுப்புக்களிலே இருந்தவர்கள், போக வாழ்வினராகவேபெரும்பாலும்மாறிவந்தனர். . இங்ங்னமாகப் பிறநிலத்தவர்களைப்போன்று ஆண்டின் பெரும்பாகமும் உழைப்பிலேயே ஈடுபடாமல் இருந்ததன் பயனாக, இவர்களிடையே சமூகவியலும் பிறவும் ஒருவகையான பொதுநிலைத் தன்மையினைப் பெற்று வளரத் தொடங்கின. போகத்திற்கே முதலிடம் தருகின்ற உளப்பாங்கும் சிலரிடையே எழுந்தது. என்றாலும், இல்லறம் பேணி, வரும் விருந்தை உபசரித்துப், பலருக்கும் உபகாரமாக விளங்குகின்ற மனிதப் பண்பின் வளர்ச்சியும் இந் நிலத்தவரிடமே எழுந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/82&oldid=761887" இலிருந்து மீள்விக்கப்பட்டது