பக்கம்:ஐந்திணை வளம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - 75 தென்பதனையும் நாம் அறிதல் வேண்டும். அறியவே, இவர்களின் சிறந்த அமைதியும் நமக்கு விளங்கும். மருதநிலத்தாரிடம் வீட்டின் தலைமை பொதுவாகப் பெண்களிடமே இருந்தது. தலைவனின் வெளிவாழ்க்கைத் தலைமை, வீட்டினுள் காலடிவைத்ததும் மறைந்துவிடும். இதனால் பெண்களுக்குக் குடும்பவாழ்விலே பொறுப்புக்களும் கடமைகளும் சற்று அ திகமாகவே இருந்தன. இதனால் அவர்கள்பால் சுதந்தரமாகச் சிந்திக்கின்ற மனோபாவமும்,. கணவனானாலும் தங்களை அலட்சியப் படுத்தினால் தாங்களும் அவனோடு பிணங்கி மாறுபட்டு ஊடுகின்ற துணிவும் இருந்தன. கணவன்மாரின் பிரிவு, முன்னர்ப்பாலைவளம் என்னும் பகுதியிற் காணப்பட்டது போன்ற காரணங்களுக்காக ஏற்படாமல், தலைவனின் பரத்தமை ஒழுக்கத்தின் காரணமாக நிகழ்வதையும் இங்குக் கவனிக்கவேண்டும் என்ன இருந்தாலும், தன் கணவன் இன்னொருத்தியுடன் இன்பவாழ்க்கை நடத்துகின்றான் என்றால், எந்தப் பெண்தான் குமுறாமல் இருக்க முடியும்? அது தன்னுடைய பெண்மையையே அவமானப்படுத்துவதாக அவள் கருதுவது இயல்புதானே! இந்தத் திண்மை தமிழகப் பெண்மணிகளிடம் நிறைந்திருந்தது. இதனால் தான் தமிழர் வாழ்வில் அடுத்தடுத்து நேரிட்ட எத்தனை எத்தனையோ பூசல்களும் குழப்பங்களும், தமிழரின் மரபின் செவ்வியையும் மருதத்திணைச் செய்யுட்கள் நமக்குக் காட்டுவனவாகும். 1. பட்டம் சிதைப்ப வரும் ஒர் ஊரிலே ஒரு தலைமகன் இருந்தான். அவனுக்கு வழிவழியாக வந்த ஏராளமான நிலபுலன்கள் இருந்தன. அளவற்ற வளத்தின் காரணமாக அவன்பால் அதற்குரிய பெருமிதமும் கண்ணோட்டமும் அமைந்திருந்தன. அவன் ஆற்றல்மிகுந்தவன். தன்னுடைய சொத்துக்களை நிர்வகிப்பதிலும் சரி, தன்னுடைய மன்னனது படையணிகளிலே தலைமைப்பாட்டுடன் செயல்புரிந்து சிறப்பெய்துவதிலும் சரி, அவன் போற்றுதலோடு விளங்கிய பெருமகனாகவே திகழ்ந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/83&oldid=761888" இலிருந்து மீள்விக்கப்பட்டது