பக்கம்:ஐந்திணை வளம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 ஐந்திணை வளம் அவன் மனத்தைக் கவர்ந்தாள் இளநங்கை ஒருத்தி. தகுதியாலும் குடிப்பிறப்பாலும் அவனுக்குச் சமமான அவள், அழகின் பெருக்கத்தினால் திருமகளைப் போன்றே விளங்கினாள். அவனைக் கண்டதுமுதல், அவளை அடைந்து வாழ்வதிலேயே அவன் உள்ளம் சென்றது. எப்படியோ, அவளும் இவனைக் கண்டதும், இவனே தன் மணவாளன் என்று கொண்டுவிடப்,பெற்றோரும் உற்றாரும் அந்த உறவிற்கு . இசைவளித்து நிற்க, அவர்களின் திருமணமும் சிறப்பாக நிறைவெய்தியது. - அவன் அவளை அன்பினைச் சொரிந்து ஆராதித்தான். கணநேரமும் பிரியாது அவளையே சுற்றிச் சுற்றி வந்தான். அவள் உள்ளமும் தன் கணவனின் அன்புள்ளத்தைக் கண்டு பூரித்தது. அவளும் அவனைத் தெய்வமாகவே போற்றினாள். அவர்களின் உறவும் இன்பத்தின் எக்களிப்போடு இவர்கள்தாம் உண்மையான காதன் மணமக்கள்’ என்று கண்டவர் வாய்குளிரப் போற்றிப்பாராட்டும்படியாக நிகழ்ந்து வந்தது. அவள் கருவுற்றாள். அவளுடைய மேனியிலே தாய்மையின் தனிப்பொலிவு ஒளிவீசியது. அவள் அதனாற் பெருமிதம் கொண்டாள். அவன் உள்ளமும், தனக்கொரு மகன் பிறக்கப்போகின்றான் என்ற மமதையினால் குதுகலிக்கத்தான் செய்தது. என்றாலும், அவளுடைய அன்பான அரவணைப்பிலே திளைத்துக் களித்த அவன், இச்சையை முழுவதும் அடக்குதற்கு முடியாமலும் வருந்தினான். அந்த வருத்தம் நாளடைவில் மிகுதியாக, அவன் உள்ளத்தே ஒரு சபலமும் எழலாயிற்று. அந்த ஊரிலிருந்த ஒர் இளம் பரத்தையைக் கண்ட போது, அவனுள்ளம், தன்னுடைய ஏக்கச் சுமையை இறக்கிவைத்து, அவளுடன் இன்ப வாழ்வு நிகழ்த்துமாறு தூண்டுவதை அவன் உணர்ந்தான். சில நாட்கள், அவன் அந்த நினைவை ஒதுக்குவதற்கு முயன்றான். ஆனால், அவளுடைய நளினமும் பொலிவும் அவனைப் பித்தனாக்கி அலைக்கழிக்க, முடிவிலே அவன், அவள் வலையிலே சிக்கி, அவள் வீடே கதியாக இருப்பவனுமானான். தலைவியின் உள்ளம் இந்தச் செய்தியை அறிந்தால் வேதனைப்படும் என்பதையோ, ஊரவர்பழிப்பர் என்பதையோ பற்றியெல்லாம் அவன் கவலைப்படவில்லை. அவனது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/84&oldid=761889" இலிருந்து மீள்விக்கப்பட்டது