பக்கம்:ஐந்திணை வளம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 ஐந்திணை வளம் இன்புறுத்துகின்றன. அவர் உள்ளத்தே தமிழ்த்தேன் சுரந்து பாய்கிறது. அந்த இனிய செய்யுளை நாமும் கற்று உணர்ந்து களித்தல் வேண்டும். - ஆற்றல் உடையன் அரும்பொறி நல்லூரன் மேற்றுச் சிறுதாய காய்வஞ்சி-போற்றுருவிக் கட்டக முத்திற் புதல்வனை மார்பின்மேற் பட்டஞ் சிதைப்ப் வரும். பொறி-செல்வம், மேற்று-மேற்பக்கத்தே, கண்+ தக= கட்டக= கணுக்கள் வெடித்தலால், பட்டம்-மேலாடை குடும்ப வாழ்விலே புதல்வன் பிறத்தலினால் எவ்வளவு பிணிப்பு உருவாகின்றது என்பதையும், அதனால் ஏற்படும் தலைவன் தலைவியரின் மனமாற்றங்களையும் தெளிவாகக் காட்டுவது இச்செய்யுள்.இதன் பொருளை உணர்ந்து களிப்பதோடு மட்டும்போதாது; இப்படிவருகின்ற தலைவனின் தோற்றத்தை மனக்கண் முன்நிறுத்திக் கண்டும் நாம் மகிழ்தல் வேண்டும். 2. நோவது எவன்? தலைமகன் ஒருவன் பரத்தையரோடு சேர்ந்து பொழில் விளையாட்டிலே திளைத்திருக்கின்றான். அவனை மலர் மாலையினாலே இறுகப் பிணித்து அவர்கள் கட்டியணைத்து ஆடித் திளைக்கின்றனர். இந்தச் செய்தி எப்படியோ தலைவிக்குத் தெரிந்து விடுகின்றது. அவள் உள்ளம் துடிக்கின்றது. தன் ஒருத்திக்கே சொந்தம் என்று இறுமாந் திருந்தவள், இப்பொழுது அவன் பரத்தையர் பலருக்கும் சொந்தமாகி, அவரது மோகத்தால் பேதைமை கொண்டு ஒழுகுவதனை அறிந்ததும் வேதனைப்பட்டாள். 'எனக்குரியவன் அவன், அவனை அவர்கள் மாலையாற் பிணித்தனரே? அவனைக் காமுற்று அடைதலை விரும்பித் திரிகின்றனரே? அவர்களும் பெண்கள்தாமா? அவர்களுடைய ஒழுக்கத்தை என்னென்று கூறுவது? அவர்கள் வெறுக்கத் தக்கவர்கள், ஒறுக்கத்தக்கவர்கள் என்றெல்லாம் சினத்தோடு பொருமினாள். இந்த எண்ணம் சிறிது நேரமே இருந்தது. அவர்கள் பரத்தையர். பொன்னையும், பொருளையும் விரும்பிப் பிறரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/86&oldid=761891" இலிருந்து மீள்விக்கப்பட்டது