பக்கம்:ஐந்திணை வளம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 81 “நின் தலைவர் முன்போல என் கழுத்தைக் கட்டித் தழுவுவதற்கு வாய்ப்பில்லை. இடையே கொஞ்சமும் பொழுதில்லாதபடி, என் மகன் பாலுண்ணும்படியாக என்பால் இப்போது நீங்காது அமைந்திருக்கின்றான். மேலும், யாம் முன்போல இளமைப் பருவத்தினேமும் அல்லேம்,புதல்வனைப் பெற்றுப் பெரிதும் மூப்பினையும் அடைந்துவிட்டோம். அதனால் அவர் விரும்பிவருவதற்கான அழகுப் பொலிவு யாதுமே என்பால் இப்போது இல்லை.” 'நீ இவ்விடம் விட்டுப்போய்விடு' 'வளருகின்ற இளமுலைகளை உடையவரான பரத்தையரின் சேரியிடத்தே சென்று சேர்வாயாக! யான் சொன்ன இவற்றை எல்லாம் அவரிடமும் சொல்வாயாக’ 'அங்ங்னம் சொல்வதற்கு நினக்குத் துணிவு இல்லையானால், அப்படியே எங்காவது போய்க் கள்ளையும் ஊனையும் விரும்பிப் பரத்தையரின் முன்பாகக் கூத்தாடி உண்பதென்றாலும், உண்டுபோவாயாக' இப்படிச் சீற்றத்துடன் பேசுகின்றாள் தலைவி, அவன் தலைவனை அடுத்திருந்து, அவனுடைய இச்சைக்கு ஏற்பப் பரத்தையரை இசைவித்து, அதனாலே வாழ்பவன். ஆகவே, 'தலைவன்பாற் சென்றுதான் உரைத்தபடி கூறினால் அவனைத் தலைவன் வெருட்டினாலும் வெருட்டி விடலாம். அங்ங்னம் வெருட்டினால், அவன் பிழைப்பதற்கு வழி கிடையாது. அதனால்தான் 'நீர் ஊன் அவாய்க் கூத்தாடி உண்ணினும் உண்க என்று, சொற்களைப் பெய்கின்றாள் தலைவி. போத்தில் கழுத்தில் புதல்வன் உணச்சான்றான் மூத்தேம் இனியாம் வருமுலையார் சேரியுள் நீத்துநீர் ஊனவாய்ப் பாணநீ போய்மொழி கூத்தாடியுண்ணினும் உண். போத்தில்-பொழுது இல்லை. சான்றான்-அமைந்தான். வரு முலையார்-வளர்கின்ற முலையாரான இளம் பரத்தையர், 'கூத்தாடி உண்’ என்றது பாணனை இகழ்ந்து கூறியதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/89&oldid=761894" இலிருந்து மீள்விக்கப்பட்டது