பக்கம்:ஐந்திணை வளம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 - ஐந்திணை வளம் தலைவியின் சொற்களால், தலைவனின் பிரிவினாலே அவள் கொண்டிருந்த மனத்துயரைப்பாணன் உணர்கின்றான். எதுவும் பேச வாயெழாதவனாக அந்த நங்கையது தாய்மைப் பொலிவினையும் கற்புமேம்பாட்டையும் வியந்தவனாக நிற்கின்றான். பேதை புகலை புதல்வன் துணைச்சான்றோன் ஒதை மகிழ்மகிழ்நற் கியாஅம் எவன்செய்தும் பூவார் குழற்கூந்தற் பொன் னன்னார்சேரியுள் ஒவாது செல்பாண நீ! புதல்வன் தன்னைப் பிரியாதே இருக்கும் அந்தச் செவ்வியை 'அவனைச் சான்றோன்’ எனக் குறிப்பதன் மூலம் தலைவி காட்டுகின்றாள். இதனால், தன்னை மறந்து தலைவன் சான்றாண்மையினைக் கைவிட்டான் என நொந்து கொண்டதும் புலனாகும். 7. நினக்குக் குறையுண்டோ? தலைவியது சொற்களாலே அவளது மனப்பாங்கைத் தெளிவாக அறிந்த பாணன், அவள்பால் எப்படியாவது தலைவனை மீளவும் சேர்த்து, அவர்களது இன்ப நல்வாழ்வினைப் புகழ்பூக்கச் செய்தல் வேண்டும் என்று கருதுகின்றான். அதனால், தலைவன் பால் ஏதும் தவறில்லை எனவும், அவன் தலைவி கருதுவதுபோன்ற எவ்வகைக் குறைபாடான ஒழுக்கமும் கொண்டவன் அல்லன் எனவும், தலைவிபால் ஆராத காதலுடையவன் எனவும் சொல்லுதலிலே ஈடுபடுகின்றான். அப்படிச் சொல்வதனால், அவள் உள்ளம் தலைவனை மீளவும் ஏற்றுக் கொள்வதிற் செல்லும் என்றே அவன் கருதினான். ஆனால், நிகழ்ந்ததோ வேறாயிருந்தது. “என்பால் அன்புடைய பாணனே! சற்றே அமர்வாயாக புதுவருவாயினைக் கொண்ட நல்ல மருதநிலத்து ஊருக்குத் தலைவனாகிய எம் தலைமகனின் மேன்மைகளை எல்லாம் எடுத்துச் சொல்வதனை மட்டும் விட்டு விடுவாயாக! 'பெரும் பாணனே! பிற பெண்களைத் காணுதற்கும் நாணங்கொள்வன் நம் தலைமகன் என்பாய். அவனுக்கு என்பாலுற்ற குறைகளெல்லாம் இருப்பனவாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/94&oldid=761900" இலிருந்து மீள்விக்கப்பட்டது