பக்கம்:ஐந்திணை வளம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 - ஐந்திணை வளம் உளங்கொண்டேன் அன்றோ! அன்றி அவன் உரைத்த பணி மொழிகள் எல்லாம் பொய்ச்சூள் என அறியாதவளாகிய யான், அதனை எழுத்துவடிவிலேயாகிலும்பெற்றுக்கொண்டேனோ? இல்லையே!” - 'ஒள்ளிய இதழ்களையுடைய தாமரைப்பூக்கள் இடையிட்டுக் கிடக்கின்ற நீர்வளமிக்க ஊருக்கு உரியவனாகிய அவனை, இப்போது என் உள்ளத்திலே இடையறாது நினைத்துக் கொண்டு அவன் என்னை நினையாதவன் ஆயினான் என்று யாரிடத்தே போய்ச்சொல்வேன்? ‘என் நிலைதான் சீர்பெற்று நன்மை அடையுமோ? ஒள்ளிதழ்த் தாமரைப் போதுறழும் ஊரனை உள்ளங்கொண்டுள்ளானென்று யார்க்குரைக்கோ-- ஒள்ளிழாய் அச்சுப் பணிமொழி யுண்டேனோ மேனாளோர் பொய்ச்சூள் எனவறியா தேன். இப்படித் துன்புறுங் காலத்துப் பழைய இன்ப நினைவுகளைப் பன்னிப்பன்னி எடுத்துரைத்துக் கலங்குகின்ற தலைவியது மனவருத்தத்தை எண்ணினால், தலைவனது பிரிவினாலே அவள் கொண்டிருக்கும் வேதனைப் பெருக்கமும் நமக்கு விளங்கும். 9. என் மார்பு அறியும் தலைவியின் வேதனையானது இப்படிப்பழைய காலத்து நிகழ்ச்சிகளை மட்டுமே உளங்கொண்டு சுழலவில்லை. அத்துடன், தலைவன் தன்னைக் கைவிட்டுப் பரத்தையரது மோகத்திலே உழலுகின்ற அந்தப் பொருந்தா ஒழுக்கத்தையும் எண்ணிக்கனன்று கொண்டிருக்கின்றது. தன்னுடைய உண்மையான காதலன்பினைப் போற்றியிராது, தன்னை வாடி நலியும்படியாகக் கைவிட்டுப் பொய்யான அன்பினைக் காட்டிப் பொருளுக்காகவே முயங்குகின்ற பரத்தையரின் உறவிலே கட்டுண்டு கிடக்கும் தலைவனின் அறிவிழந்த செயலை நினைக்க அவளுடைய உள்ளக் கொதிப்பு மிகுதியாகிக் கொண்டும் போகின்றது. அதனைத் தோழியிடத்தே வாய்விட்டு உரைக்கின்றாள் அவள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/96&oldid=761902" இலிருந்து மீள்விக்கப்பட்டது