பக்கம்:ஐந்திணை வளம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - 89 "அழகாலே மாண்பினைக் கொண்ட அணிகளை உடையவளே!” "தம்பாலராக விளங்கும் தலைவரைக் காணாவிடத்து, அப்பரத்தையர் பேதைமை உடையவர் என்று பழித்துச் சினங்கொண்டிருப்பார்கள். ஒப்பற்ற தாமரைப் பூக்கள் இடையிட்டுக்கிடக்கும்படியான இடத்தையுடைய ஊருக்குரிய தலைவனை எதிரே கண்ட போதிலேயே வாயினை ; மூடிக்கொண்டுஅன்பு காட்டிநிற்பார்கள். - “அதனை நினைந்து என் நெஞ்சம் நோவதனை இன்று என்மார்புதான் அறியா நின்றது”என்கிறாள் தலைவி. பேதையர் என்று நமரைச் செறுபவோர் போதுறழ் தாமரைக்கண் ஊரனை நேர்நோக்கி வாய்மூடியிட்டு மிருப்பவேர் மாணிழாய்! நோவதென் மார்பறியும் இன்று. - பொய்க்காதல் பூண்டு ஒழுகும் பரத்தையரிடத்தே மயலுற்றுக் கிடக்கும் தலைவனது அறியாமையினையும் மெய்க்காதல் கொண்ட தன்னை மறந்து போயின கொடுமை நிலையினையும் நினைந்த தலைவி இங்ங்னம் கூறுகின்றாள். உயரிய நயம் நிறைந்த் செய்யுள் இதுவாகும். - 10. நீரும் ஏங்காதீர் தலைவியை மறந்து பரத்தையரின் மோகத்திலே உழன்ற தலைவன், ஒருத்திபால்மட்டுமே கட்டுண்டுகிடந்துவிட்டானும் அல்லன். தன்னைக்கவர்ந்தவளுடன் சிலகாலம் இன்புற்றிருந்து, பின் அழகியாளான வேறொருத்தியைக் கண்டதும் அவள்பாற் சென்றான். - தலைவனால் கைவிடப்பெற்ற அவள்,தலைவனின் அந்தக் கொடுமையினை ஆற்றாது புலம்பி நலிகின்றனள். இப்படி நலிபவர்களும் சிலராயினர். ஒரு நாள், இவர்கள் தலைவியிடத்தே வந்து, தலைவன் தமக்குச் செய்த கொடுமையினைக் கூறி வருந்துகின்றனர். தன்னிடமிருந்து தலைவனை அவர்கள் பிரித்த போது, அவர்கள்பாற் சினங்கொண்டு பழித்த தலைவியின் உள்ளம், இப்போது அவர்கள் தன்னைப் போலவே கைவிடப்பெற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/97&oldid=761903" இலிருந்து மீள்விக்கப்பட்டது