பக்கம்:ஐந்திணை வளம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 - ஐந்திணை வளம் நிலத்தவன் நம் தலைவன். அவனை, என்னைப் போன்று நீங்களும், இனிக் காதலினாலே உங்கள் வேட்கை முற்றவும் நீங்கும்படியாகத் தழுவியிராதீர்கள்: 'அறியாமை வயப்பட்டு, எண்ணற்ற ஆசை மொழிகள் பலவற்றையும் கூறி, ஏங்கிவருந்தாதும் இருப்பீர்களாக 'இங்ங்ணம் இருப்பீராயின், அவன் விரைவிலே நம்பால் திரும்பிவருவான் என்பது இதன் குறிப்பாகும். இங்ங்னம் துயரால், ஒன்றுபடும் பெண்மைச் செறிவினைக்கண்டமூவாதியரின் உள்ளம்பெரிதும் வியப்பிலே ஆழ்கின்றது. தலைவியின் அந்த மனநிலையை அவள் சொற்களேபோலப் பாட்டுள் பொதிந்து வைத்துப் பாராட்டுகின்றார். காதலின் தீரக் கழிய முயங்கன்மின் ஓதம் துவன்றும் ஒலிபுனல் ஊரனைப் பேதைபட் டேங்கன்மின் நீயிரும் எண்ணிலா ஆசை யொழிய வுரைத்து. ஒருவருக்கொருவர் கொண்டிருந்த பகைமையை மறந்து, இப்படிப் பொதுவான துயரத்தாலே ஒருவருக்கொருவர் பரிவுகாட்டும்பெண்மைப்பண்பினைநாமும் அறிந்துவியப்புறல் வேண்டும். 11. நின் மேலது பழிபாடு தலைவியைப் பிரிந்து தன்னுடைய மயக்கத்தினாலே பரத்தையரது உறவினை நாடித்திரிந்த தலைவன், சிறிது காலத்திற்கு பின்னர், தன்மனம் மீளவும் தலைவியின் உறவினை நாடுதலால், அவளை நாடிவருகின்றான். அவளோ, அவனது செய்கையினாலே மனம் பேதுற்றுக் கலங்கியிருந்தவள் அதனால், அவனது கருத்துக்கு இசையாது, ஊடிச்சினந்து ஒதுங்குகின்றாள். அவளுடைய ஊடலும், சினமும் அவன்பாற் பெரிதும் காதலை மிகுதிப்படுத்த, அவன் அவளிடம் பணிமொழிபலவும் கூறியவனாகத் தன்ன்ை ஏற்றுக் கொள்ள வேண்டுகின்றான். முடிவில், தலைவியின் தோழிபாற் சென்று, தலைவியது நிலையைக்கூறி, அவளைத் தலைவியின் சினத்தை மாற்றியுதவுமாறும் கேட்டுங் கொள்கின்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/98&oldid=761904" இலிருந்து மீள்விக்கப்பட்டது