பக்கம்:ஐந்து செல்வங்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
15


“அண்ணா இமைகள் இல்லாவிட்டால் கண்களுக்கு ஒளியே இராதுபோலத் தோன்றுகிறது. சிறிது நேரம் இமைக்காதிருந்தால், கண்களில் நீர் சுரந்து பார்வை மங்கிப் போகிறது. ஆகவே, இமைகள் இமைத்து கண்களில் இயல்பாகச் சுரக்கும் நீரை அழுத்தி அழுத்தி சுரக்காமற் செய்து, கண்களுக்குப் பேருதவியைச் செய்து வருகின்றன.”

“தம்பி! அதுவும் சரி! உன் அறிவு சரியாக வேலை செய்கிறது. மேலும் சிந்தனை செய். முயற்சி! உம்!”

“அண்ணா! இமைக்குள்ள உணர்ச்சியை எண்ணும்போது மயிர் சிலிர்க்கிறது. கல், குச்சி, தூசி முதலியவைகளைக் கண் அறியாதிருந்தாலும், இமைகள் அறிந்து மூடித் தடுத்துவிடுகின்றன. அண்ணா! அதை எண்ணும்போது இமைகளுக்கும் ஒரு கண் இருக்கலாமோ என்ற ஐயமும் உண்டாகிறது. இமைகளுக்குக் கண்களிருக்கக் காரணமில்லை, இல்லாதிருந்தும் உணர்ச்சி இருப்பது வியப்பாகத் தோன்றவில்லையா? அண்ணா! ஒரு மாட்டின் மீது கல்பட்டாலும், அடிவிழுந்தாலும், ஈ உட்கார்ந்தாலும், அந்த மாடு அந்த இடத்தின் தோலை மட்டும் சுழித்து உதறிக் காட்டும். மனிதன் தோல் அவ்வாறு செய்வதில்லை என்றாலும், இமைகளுக்கு மட்டும் அச்செயல் இருந்துவருவது ஒரு வியப்பாகவே இருந்து வருகிறது.”

“தம்பி! அதுவும் உண்மைதான் மேலும் சிந்தனை செய்! விடாதே முயன்று பார்!”

“அண்ணா! சன்னற் கதவுகள் காற்றும் வெளிச்சமும் வேண்டியபோது திறந்து வைக்கவும், பனி, சாரல் முதலியவைகள் அடிக்கும்போது மூடவும் உதவுவதைப் போல, கண்களுக்கும் இமைகள் உதவவேண்டும் போலத் தோன்றுறது. நலலவைகளைப் பார்க்கும்போது திறக்கவும், தீயவைகளைப் பார்க்கும்போது மூடவும் வேண்டி அவ்வாறு அமைந்திருக்கின்றன என நினைக்கிறேன். வாய்க்கு உதடுகளும் அப்படித்தான் போலும். வீட்டு வாயிற்படியின் இரட்டைக் கதவுகளும், வாயின் இரட்டை