பக்கம்:ஐந்து செல்வங்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
5. திருச் செல்வம்

“திரு” என்பது அழகு, தூய்மை, உண்மை, உயர்வு, நிறைவு எனப் பொருள்படும். ‘செல்வம்’ என்பது ‘பொருளை’க் குறிக்கும் பொன்னும் மணியும் உள்ளவரையே மக்கள் ‘செல்வர்’ எனக் கருதுகின்றனர்.

‘திரு’ செல்வத்தின் அடைமொழி ஆகவே, திருச் செல்வம் என்பது அழகிய செல்வம், தூய்மையான செல்வம், உண்மையான செல்வம், உயர்ந்த செல்வம், நிறைந்த செல்வம் எனப் பலவகையாகப் பொருள்படும், இத்‘திரு’வைப் பெற்ற செல்வம் எது? பொன்னும் மணியுமாகிய பொருள் தானா செல்வம்? இதுவும் ‘பொருட்செல்வம்’ எனக் கூறப்படுவதனால், பொருளுக்கு வேறாக ஒரு செல்வம் உண்டு என்றாவது செல்வம் பலவகைப்படும் என்றாவது எண்ண இடம் ஏற்படுகிறதே!

இந்த ஐயப்பாடு மணிக்கும் முத்துவுக்கும் ஏற்பட்டது. “எது செல்வம்!” என்பதை அறியவேண்டும் என்ற முடிவுக்கு இருவரும் வந்தனர். மணியும் முத்துவும் நண்பர்கள். மணி பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவன். முத்து பரம ஏழை. ஆனாலும், இருவரும் அறிவாளிகள் ஆனதால் இவர்களுக்குள் நட்பு ஏற்பட்டு வளர்ந்து வந்தது. ஒருநாள் மணி தன் தந்தையிடம் சென்றான். தான் முத்துவுடன் சென்று செல்வம் தேடி வருவதாகக் கூறி, விடையும் பெற்றுப் பொருளும் பெற்றுப் புறப்பட்டான்.

இருவரும் பல ஊர்களைச் சுற்றினர்; பலவிடங்களில் தேடினர். முடிவில் ஒரு மன்னனின் மாளிகையைக் கண்டு

ஐ.செ.-3