பக்கம்:ஐந்து செல்வங்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
34

மகிழ்ச்சியுற்றனர். மிகவும் விலையுயர்ந்த பொருள்கள், மேசைகள், நாற்காலிகள், தந்தக் கட்டில்கள், பஞ்சு மெத்தைகள், பட்டு விரிப்புக்கள், எளிதில் உருண்டு வரும் நிலைப் பெட்டிகள் என்றுமசையாத இரும்புப் பெட்டிகள், முத்துக்கள், பவளங்கள், பொற்கட்டிகள், மணிக்குவியல்கள், சரிகை உடுப்புக்கள், வைர நகைகள், வெள்ளிக் கோப்பைகள், விளையாடும் குழந்தைகள், அரிய நிலங்கள், அழகான வண்டிகள், ஆடுகள், மாடுகள், யானைகள், குதிரைகள் அனைத்தும் கண்டனர்.

மணி : முத்து! இந்த இடத்தில்தான் செல்வம் நிறைந்திருக்கிறது நாம் பலநாள், பல விடங்களிற்சுற்றி அலைந்தாலும், முடிவில் நிறைந்த செல்வத்தைக் கண்டு வெற்றி பெற்றோம் என மகிழ்ந்து கூறினான்.

முத்து : ‘நண்பா! அவசரப்படாதே! இங்கே செல்வமும் இல்லை; அது நிறையவுமில்லை? நாம் வெற்றியடையவுமில்லை’ என மிகப் பொறுமையாகக் கூறினான்.

மணி : ‘என்ன?’ என வியந்து வினவினான்.

முத்து : “அரண்மனையைச் சுற்றிச் சுற்றி வந்தோமே? அறை அறையாகப் பார்த்து வந்தோமே! எங்கேனும் ஒரு நூல் நிலையத்தைக் கண்டோமா? இல்லையே!” என்றான்.

மணி பெரிதும் வெட்கினான். ஆம். அது இங்கு இல்லை செல்வம் இருவகைப்படும். அவை முறையே கல்விச் செல்வம், பொருட்செல்வம் எனப் பெறும் என மணி முன்பு படித்திருந்தான் அது இப்போது அவனுடைய நினைவிற்கு வந்தது. வருந்தினான். மறுபடியும் செல்வத்தைத் தேடி இருவரும் வேற்றூர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

மற்றோர் ஊரில் ஒரு பெருஞ்செல்வனுடைய மனையில் அழகான நூல் நிலையம் ஒன்று அருமையாக அமைக்கப் பெற்றிருப்பதை அறிந்து, இருவரும் அங்குச் சென்று தங்கி இருந்தனர். அடுத்த நாள்