உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒட்டுமாஞ்செடி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒட்டுமாஞ்செடி

சற்று விவேகமும் ரோஷமும் படைத்த மைந்தன் வீட்டை விட்டு வெளியேறி, தொழில் புரிந்து தன் நிலையைப் பலப்படுத்தி, தகப்பனைக் கூப்பிட்டுப் "பார் அப்பா! வீணன், வேலைக்கு லாயக்கற்றவன், சோம்பேறி, என்று கூறினீரே, பாரும் எனது திறத்தை, செயலாற்ற விடவில்லை நீர். சதா எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுக் கொண்டு எங்களை எரிச்சலோடு ஏசினீர். பாரும் எமது வேலையை, வேலையின் திறத்தை, வெற்றியை" என்று தானே கூறுவான்? காட்டுவான்!

அது போலவே தான் நாமும் நம்மை மதியாத, இகழ்ந்த, தூற்றின, துச்சமென மதித்த, தலைவரின் தலைமையை விட்டு வெளியேறித் தனிக்குடித்தனம், தனிமுகாம், தனிக்கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம் அமைத்திருக்கிறோம். நாம் உழைத்து உருவாக்குவோம் இந்தக் கழகத்தை.

சுவீகாரப் பிள்ளை

நான் தான் அவரோடு பலத்த கருத்து வேற்றுமை கொண்டேன் என்றும், அவரைப் பிடிக்கவேயில்லை என்றும் பேசுவது தவறு, உண்மைக்குப் புறம்பானது. எனக்கு அவரோடு தொடர்பு ஏற்பட்டது 1935–ம் ஆண்டில். நான் அப்போது பி. ஏ. ஹானர்ஸ் பரிட்சை எழுதியிருந்தேன். பரிட்சை முடிவு தெரியாத நேரம் அது. அப்போது கோவைக்கடுத்த திருப்பூரில் ஓர் வாலிபர் மாநாடு நடந்தது. அங்கு தான் பெரியாரும் நானும் முதன் முதலில் சந்தித்தது. அவரிடம் எனக்குப் பற்றும் பாசமும் ஏற்பட்-

11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒட்டுமாஞ்செடி.pdf/10&oldid=1854034" இலிருந்து மீள்விக்கப்பட்டது