உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒட்டுமாஞ்செடி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒட்டுமாஞ்செடி

டது. அவரது சீர்திருத்தக் கருத்துக்கள் எனக்குப் பெரிதும் பிடித்தன.பெரியார் என்னைப்பார்த்து "என்ன செய்கிறாய்" என்று கேட்டார். 'படிக்கிறேன், பரிட்சை எழுதியிருக்கிறேன்' என்றேன். 'உத்தியோகம் பார்க்கப்போகிறாயா?' என்றார். "இல்லை உத்தியோகம் பார்க்க விருப்பமில்லை, பொது வாழ்க்கையில் ஈடுபட விருப்பம்" என்று பதிலளித்தேன். அன்று முதல் அவர் எனது தலைவர் ஆனார். நான் அவருக்குச் சுவீகாரப் புத்திரனாகிவிட்டேன். பொது வாழ்வில் அன்றிலிருந்து இன்றுவரை சுவீகாரப் பிள்ளைதான் நான் அவரது குடும்பத்தாருக்கு! இன்றும் கூட அந்தத் தொடர்பு விடவில்லை எனக்கும் அவருக்கும். ஏன்? அவருடைய அண்ணார் பிள்ளை சம்பத் என்னுடைய சுவீகாரப் பிள்ளை. இப்போது 14 வருடங்கள் அவரோடு பழகினேன். 14 வருடங்களாகப் பொது வாழ்வில் இருக்கின்றேன்.

நான் அறிந்த ஒரே தலைவர், ஒரே கட்சி!

இத்தனை ஆண்டுகளிலும் நான் அறிந்த தலைவர், தெரிந்த தலைவர், பார்த்த தலைவர் இவர் ஒருவர்தான். வேறு தலைவரின் தலைமையில் நான் வேலை செய்ததும் கிடையாது, செய்யவும் மனம் வந்ததில்லை, வராது. அதே காரணத்தினால்தான், இன்று கூட, திராவிட முன்னேற்றக் கழகத்திற்குக்கூடத் தலைவரை ஏற்படுத்தவில்லை; அவசியம் என்று கருதவில்லை. இருதய பூர்வமான தலைவர், இருதயத்திலே குடியேறிய தலைவர், நமக்கெல்லாம் அப்பொழுது நல்வழி காட்டிய பெரியார் அமர்ந்த பீடத்தை,

12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒட்டுமாஞ்செடி.pdf/11&oldid=1854036" இலிருந்து மீள்விக்கப்பட்டது