உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒட்டுமாஞ்செடி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒட்டுமாஞ்செடி

தலைவர் பதவியை, நாற்காலியை காலியாகவே வைத்திருக்கிறோம். அந்த பீடத்திலே, நாற்காலியிலே வேறு ஆட்களை அமர்த்தவோ, அல்லது நாங்களே, அல்லது நானே அமரவோ விரும்பவில்லை.

பகையுணர்ச்சி நமக்குக் கிடையாது

நான் மிக-மிகத் தெளிவாகக் கூறிவிடுகிறேன். திராவிட முன்னேற்றக் கழகம் எந்த விதத்திலும் திராவிடக் கழகத்திற்கு எதிரானதல்ல, எதிர் நோக்கம் கொண்டதுமல்ல. கொள்கை ஒன்றே, கோட்பாடும் ஒன்றே. அங்கிருந்தவரில் பெரும்பாலோர்தான் இங்கு இருக்கின்றனர். குடும்பத் தலைவரின் போக்கு பிடிக்காத காரணத்தால், மக்கள் வேறு மனையில் வசிக்கும் பண்பினைப்போல, தன்மையைப்போல பகையுணர்ச்சி சற்றும் கிடையாது நமக்கு.

இக்கூட்டத்தின் இடையே மழை பொழிந்து சற்று சங்கடத்தைத் தருவதுபோல, இடை இடையே சிறு சிறு தூறல்கள் தூறலாம்; நம்மிடையே அது வார்த்தை வடிவிலே வரலாம்; விசாரப்படாதீர்கள். அதுவும் அந்தப் பக்கமிருந்துதான் வரலாம். இப்பக்கமிருந்து நிச்சயம் உண்டாகாது.

மோதுதல் வீண் வேலை

பெரியார்தான் எங்களை மறந்தார். உதாசீனம் செயதார், உதாவாக்கரைகள் என்று கூறினார், மனம் நோகும்படி பேசினார், எழுதினார், நடந்தார், நடந்துகொண்டிருக்கிறார். நாம் அவரோடு மேலும் மேலும் போராடவோ

13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒட்டுமாஞ்செடி.pdf/12&oldid=1854043" இலிருந்து மீள்விக்கப்பட்டது