ஓட்டுமாஞ்செடி
மோதவோ போவதில்லை. விவேகமில்லை என்று கருதுவதால், வீண் வேலை என்று நினைப்பதால்.
எனக்கு விளைவு தெரியாதா?
அவர் போக்கைக் கண்டித்ததால் என்ன திடீர் லாபம் ஏற்பட்டுவிட்டது. எனக்கோ, அல்லது என்னோடு நிற்கும் நண்பர்களுக்கோ? ஒன்றுமில்லை! எனக்குத் தெரியாதா? யார் என்ன கூறுவர் என்பது. எனக்குத் தெரியும், பெரியாரைக் கண்டிப்பதால் சிலர் ஏசுவர், சிலர் தூற்றுவர் பற்பல விதமாக. நேற்றுவரை அறிஞன் என்று போற்றப்பட்டானே இன்று என்ன அறிந்தான் இவன்? என்று கேலி செய்யும் கூட்டம் கிளம்பும் என்பது தெரியும். நான் எழுதிய சினிமாக் கதையைப் பற்பல விதமாகப் புகழ்ந்தவர்களும், என்னப்பா, அதிலே இருக்கிறது? என்று நையாண்டி செய்வர் என்பதும் தெரியும். நேற்றுவரை எனது 'கம்பரசத்தை' இனிப்பாகக் கருதியிருந்தோர், இன்று பழைய காடியாகக் கருதுவோராகக் கிளம்புவர் என்பதும் அறிவேன். நான் ரேடியோவில், ஆங்கிலத்தில், பாரதியார் பற்றிப் பல நாள் முன்னரே பேசியிருக்கிறேன். "மக்கள் கவி பாரதி" என்ற தலைப்பிலே; ஆங்கிலத்திலே அப்போது போற்றினர்."ஆகா எங்கள் அண்ணாவைப் பார். உண்மைப் பாரதியாரைப் படம் பிடித்துக் காட்டுகிறான்" என்று போற்றினர். இன்றோ,"பார்! பார்! பயல் பாரதி விழாவிலே கலந்துகொண்டு காங்கிரசுக்கு நல்ல பிள்ளையாகிறான்" என்று தூற்றுவர் என்றும் தெரியும். தெரிந்தும் கடமையுணர்ச்சி, மனிதப் பண்பு ஆகியவை
14