ஒட்டுமாஞ்செடி
என்னைப் பெரியார் திருமணத்தைத் தகாதது என்று கூறிட வைத்தன.
எனக்கு எதிலே குறை ஏற்பட்டது?
எனது பீடத்தைக் காலி செய்து வந்து விட்டேன் அங்கிருந்து நானாகவே. நான் விரும்பினால், விரும்பியிருந்தால், அங்கேயே இருந்திருக்கலாம், எல்லாவகை விருந்துகளோடும். என் நிலை என்ன அங்கே சாமான்யமானதா? எளிதில் கிடைக்கக் கூடியதா? இல்லையே! அவர் அங்கே கடவுள் நிலையில் இருக்கிறாரென்றால், நான்தானே அர்ச்சகன்! அவர் தம்பிரான் என்றால், நான்தானே கட்டளைத் தம்பிரான்? அவர் தலைவர், நான் தளபதி! என்று தான் போற்றப்பட்டேன். புகழப்பட்டேன். இன்று அவரது "வாழ்க்கைத் துணை நலம்" ஆன மணியம்மையும் கூட எனக்குத்தான் மற்ற எவரையும் விட அதிக மரியாதை, வரவேற்பு காட்டியிருக்கிறார். பெரியார் எழுதுவதாகக் கூறின டிரஸ்டிலும் என் பெயர்தானே முதலில் இருந்திருக்கும்! நான் என்ன இவ்வளவு விருதையும் புகழையும் கெடுத்துக்கொள்ள பித்தனா? வரட்டு ஜம்பம் பேசி, கழகத்தில் புகழ் வாழ்வைக் கெடுத்துக்கொள்ள நான் என்ன வெறியனா? அல்லது இதை விட்டு வேறு வேலை தேட குமாரசாமி ராஜாவிடம் ஏதாவது அப்ளிக்கேஷன் போட்டிருக்கிறேனா?அதுவும் இல்லையே! எனக்கு என்ன லாபம் ஏற்படும் என்று அவரைக் கண்டிக்க வேண்டும்? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்!
பெரியாரோடு மாறுபட்ட கருத்துக்கொண்டவன்
15