உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒட்டுமாஞ்செடி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒட்டுமாஞ்செடி

ஈரோடு மாநாடே காட்டும் !

தூத்துக்குடி மாநாட்டைக் கண்டவர்கள், ஈரோடு மாநாட்டையும் காணத்தானே நேர்ந்தது. தூத்துக்குடி மாநாடு முடிந்ததும் என்ன பேச்சு நடந்தது, நாட்டிலே சிலரிடமாவது ? தூத்துக்குடி மாநாட்டுக்கு அண்ணாதுரை வரவில்லை, ஒழிந்தான் இதோடு. கழகத்தை விட்டு மட்டுமல்ல, பொதுவாழ்க்கையே அவனுக்கு இனிக் கிடையாது. அஸ்தமித்து விட்டது பொது வாழ்வு என்று எக்காளமிட்டனர். அது மட்டுமா ? தனியாக அவன் வந்தால் அவன் வாழ்க்கையே முடிந்து விடும் என்ற நிலைதான் என்று கூட பேசப்பட்டதாம். அப்படிப்பட்ட நிலை வெகு விரைவிலே மாறி எனக்காகப் பெரியாராலேயே, பெரியாரின் ஊரிலேயே, ஈரோடு நகரத்திலேயே, மாபெரும் மாநாடு எனது தலைமையில் நடத்தப்பட்டது. அடையும் ஆறுதல் நேரத்திலே இந்த வரவேற்புப் பத்திரம் அவர் கண்களில் படாமலா போகும்! அப்படி அவரால் அன்பாக நடத்தப் பட்டு வந்த நான் இல்லை! திரும்பிப் பார்த்தால் சம்பத்து இல்லை! கும்பகோணம் போனால் வரவேற்கக் குடந்தை தோழர் கே. கே. நீலமேகம் இல்லை! திருச்சியிலே பராங்குசமுமில்லை! மதுரையிலே முத்து இல்லை! விருதுநகர் ஆசைத்தம்பி, தூத்துக்குடி நீதிமாணிக்கம், கே. வி. கே. சாமி முதலானோர் காணோம். நம் பக்கம் கோவில்பட்டி வள்ளி முத்து, பெத்தாம்பாளையம பழனிச்சாமி, சென்னையிலே நடராஜன், கோவிந்தசாமி முதலிய யாருமே நம்மை விட்டு ஏகினர்; என்ன உழைப்பு! உறுதி படைத்தோர்கள்! இவர்கள் இல்லையே என்ற ஏக்கம் பெரியாருக்கு வராமலா போகும்! வந்தே தீரும்! அப்போது அவர் மகிழ்ச்சி அடைவாரா ? அவர் வேண்டுமானால் நடிக்கலாம், மகிழ்ச்சியோடு இருப்பதாகக் காட்டிக்கொள்ளலாம் பிறர் முன். பலர் என்னைக் கூறுவர் நான் மிக நன்றாக நடிக்கிறேன் என்று. இதெல்லாம் நான் ஐயாவிடம், பெரியாரிடம் கற்ற பாடத்திலே ஒரு சிறுபகுதி. ஐயா மிக மிக நன்றாக நடிப்பார் மகிழ்ச்சியோடு இருப்பது போல, உண்மை-

2

17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒட்டுமாஞ்செடி.pdf/16&oldid=1854051" இலிருந்து மீள்விக்கப்பட்டது