உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒட்டுமாஞ்செடி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒட்டுமாஞ்செடி

யில் மகிழ்ச்சி இருக்காது, இருக்க முடியாது, மனித உள்ளம் படைத்த எவராலும் இயலாது.

சோம்பேறி தனத்தின் விளைவா ?

திராவிட முன்னேற்றக் கழகத்தில் பணியாற்றத் தொடங்கியிருக்கிறோம். நான் மிகவும் சோம்பேறி, பெரியார் போல் உழைக்க முடியாது என்று கூறுகிறார்கள். நான் ஒப்புக்கொள்ளுகிறேன். பெரியார் போல உழைக்க முடியாது என்று. ஏன் ? அவருக்கு உழைக்க சக்தி, போதுமான வசதியிருக்கின்றன. அவ்வளவு வசதியும், சக்தியும் பெற்றவனல்ல நான் என்பது மட்டுமல்ல. பெரியார்போல உழைப்பதே தவறு, கூடாது, தேவையற்றது என்ற கருத்துடையவன் நான் ; அது ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல ; முரண்பட்டது என்ற கருத்தும் கொண்டவன். ஒரே மனிதர் தானே எல்லாப் பொறுப்பையும் வகிப்பது தவறு. பிறருக்கும் சந்தர்ப்பம், வசதியளிக்க வேண்டியது என்ற போக்கை கொண்டவன். சோம்பேறி என்று கூறுவதுதான் எனக்கும் பொருந்துமா? என்று பாருங்கள். எட்டு ஆண்டுகளாக நான் ஒருவார இதழ் 'திராவிடநாடு' நடத்தி வருகிறேன். காஞ்சியிலிருந்து இதனை நான் ஒருவனே நடத்தி வருகிறேன். இது சோம்பேறிதனத்தின் விளைவா? என்று கேட்கிறேன். இந்த பத்திரிகையிலே ஓரிரு பக்கங்களைத் தவிர, மற்றவை யாவும் என்னாலேயே எழுதப்படுபவை. இதுவும் சோம்பேறித்தனத்தின் விளைவா? மாலை மணி சென்னையிலும், திராவிடநாடு, காஞ்சியிலும் நடக்கின்றன. மாலை மணி தினசரிப் பத்திரிகை. இரண்டுக்கும் நான் ஆசிரியர் வேலை பார்க்கிறேன். சோம்பேறித்தனத்தின் விளைவா?

இடையிலே பல பகுத்தறிவுப் பிரசார நாடகங்கள் எழுதியிருக்கிறேன். சோம்பேறித்தனத்தின் விளைவா? சில நாடகங்களில் நானே வேஷம் போட்டு நடித்திருக்கிறேன். சோம்பேறித்தனத்தின் விளைவா? இரண்டு சினிமா

18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒட்டுமாஞ்செடி.pdf/17&oldid=1854052" இலிருந்து மீள்விக்கப்பட்டது