உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒட்டுமாஞ்செடி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒட்டுமாஞ்செடி

கதைகள் எழுதியிருக்கிறேன், சோம்பேறித்தனத்தின் விளைவா? பத்துப் பதினைந்து புத்தகங்கள் வேறு வெளி வந்திருக்கின்றன; சோம்பேறித்தனம்தான் காரணமா? இதனிடையே பல முறை பல பிரசாரக் கூட்டங்களுக்கும் போயிருக்கிறேன், சோம்பேறித்தனத்தின் விளைவா? இல்லையென்பது தானே பதில்! எதற்காக இதனைக் கூறுகிறேன், சோம்பேறி என்று எண்ண வேண்டாம், காரியமாற்றும் திறன் உண்டு. சக்தி இருக்கிறது; என்பதைக் காட்டத்தான். வேலை செய்யும் திறமையும், ஆற்றலும், ஆர்வமும் நிச்சயம் உண்டு. சமீபத்தில் தோழர் குருசாமி அவர்கள், இளைஞர்—முதியோர் பற்றி ஆராய்ச்சி நடத்தி கிழவர்கள் திறமையைப் பற்றி பெரிதும் எழுதியிருக்கிறார்கள். நான் என்ன துள்ளி விளையாடும் பள்ளிப் பருவத்துப் பாலகனா? அல்லவே, நாற்பது வயதை அடைந்தவன் தான். இளைஞனின் துடிதுடிப்பும், கிழவரின் பொறுமையும் காரியமாற்றும் கருத்தும் ஒருங்கே கொண்ட வயது தான். நாற்பதைக் கடந்தவன் ஐம்பதுக்கு உட்பட்டவன், அதாவது இந்த பத்து ஆண்டைத்தான், இளமைக்கும், முதுமைக்கும் இடையேயுள்ள காலம் என்று கூறுவர். பெரியார் தமது சுயமரியாதைக் கோட்பாட்டை இந்தப் பத்து ஆண்டுகளில் தான்; அதாவது நாற்பதுக்கும் ஐம்பதுக்கும் இடையே தான், அமைத்தார். என்னாலும் செய்ய முடியும், முறைப்படி அவசியத்திற்கேற்ற வகையில்.

எந்த நலம் கெட்டு விட்டது

மற்றொரு காரணம் கூறப்படுகிறது. அதாவது நான் சுயநலத்துக்காகவே இந்த ஏற்பாட்டை எதிர்க்கிறேன் என்று. எனக்குத் திராவிடர் கழகத்திலே இருந்த போது எந்த நலன் கெட்டுவிட்டது? ஒன்றும் கெடவில்லையே! நாடகம் எழுதாதே என்று தடுத்தாரா தலைவர். இல்லையே! சினிமாவுக்குக் கதை எழுதாதே என்று தண்டித்தாரா பெரியார் என்றாவது? கிடையாதே! சுயநலமாயிருந்தால் எனக்கு

19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒட்டுமாஞ்செடி.pdf/18&oldid=1854272" இலிருந்து மீள்விக்கப்பட்டது