உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒட்டுமாஞ்செடி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒட்டுமாஞ்செடி

அங்கு இருப்பதால் என்ன கெட்டு விட்டது? ஒன்றும் கெடவில்லையே! சிற்சில சமயம் தலைவர் போக்குப் பிடிக்காது இருந்திருக்கலாம், அவர் கருத்துகள் எனக்குப் பொருத்தமற்றதாகத் தோன்றிருக்கலாம். அப்போதெல்லாம் கூட முடிந்தவரை ஒத்துழைக்கத்தான் செய்தேன்; சிற்சில சமயம் நாசூக்காக பெருந்தன்மையாக ஒதுங்கியுமிருந்தேன். அரசியல் துறவறம் பூண்டுமிருந்தேன் சில காலம். இன்று காரணமின்றி தூற்றப்படுகிறேன்; கவலையில்லை; நேற்று நம்மைப் புகழ்ந்தவர்தானே, அவர்! இன்றுகூட என் மனக்கண் முன்னே ஒரு காட்சி ஓடி வந்து நிற்கிறது. ஈரோட்டிலே விடுதலை காரியாலயத்தில் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்த காலம் அது; அப்போது விடுதலையில் சென்னை கார்ப்பரேஷன் பற்றி ஒரு தலையங்கம் தீட்டினேன். "ரிப்பன் மண்டபத்து மகான்கள்" என்பது அதன் தலைப்பு. அன்று மாலை நான் ஈரோட்டில் பெரியாரின் மூன்றடுக்கு மாளிகையில், கடைசி மாடியில் உலவிக் கொண்டிருந்த நேரத்தில் பெரியார் மூன்று மாடிகளையும் கஷ்டத்துடன் படியேறி, கடந்து வந்து, என் முதுகைத்தட்டி அண்ணாதுரை! உன் தலையங்கம் ரொம்ப நன்றாயிருந்தது. எனக்கு மிகவும் சந்தோஷம் என்று வெகுவாகப் பாராட்டினார். இதைக் கேட்ட நான் 'இதற்காக ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு மாடி ஏறி வரவேண்டும்? நான் சாப்பிடக் கீழே வரும்போது சிரமமின்றிக் கூறியிருக்கலாமே இதனை' என்று தெரிவித்தேன். அதற்குப் பெரியார், 'என் மனதில் நல்லெண்ணம் தோன்றியது. சந்தோஷப்பட்டேன். அதை உடனே கூறிவிட வேண்டுமென்று நினைத்தேன். ஏனென்றால் நான் பிறறைப் புகழ்ந்து பேசிப்பழக்கப்பட்டவனல்ல, ஆகவே உடனே சொல்லிவிட வேண்டுமென்று வந்து சொல்லிவிட்டேன்' என்று சொன்னார். இந்த ஒரு சம்பவம் போதுமே எனக்கு ஆயுள் பூராவும். அவரிடம் திட்டு வாங்கினாலும் பரவாயில்லையே. புகழ்ந்த பிறகுதானே திட்டுகிறார். முதலிலிருந்து கடைசிவரை திட்டு வாங்கிச் கொண்டு, இன்னும் இருந்து கொண்டிருக்கிறார்களே, அதை விட நான் மேல். லாப நஷ்ட கணக்குப் போட்டுப்

20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒட்டுமாஞ்செடி.pdf/19&oldid=1854273" இலிருந்து மீள்விக்கப்பட்டது