ஒட்டுமாஞ்செடி
பார்த்தேன். அவர் புகழ்ந்தது அதிகம், இகழ்ந்தது கொஞ்சம். எனவேதான் அவர் திட்டுவதைப் பற்றிக் கவலைப்படவில்லை. நான் அவரிடம் வெளிப்படையாக கொஞ்சம் அதிருப்தி தெரிவித்தது கோவை மாநாட்டில் தான். நான் கேட்டேன் திருவண்ணாமலையில் ஆச்சாரியாரைச் சந்தித்துப் பேசிய இரகசியம் என்ன? கூறுங்கள் வெளிப்படையாக என்று கேட்டேன். இதைக்கூட நான் கேட்க முதலில் விரும்பவில்லை. ஆனால் நாட்டு நிகழ்ச்சிகள் என்னைக் கேட்கும்படி வைத்துவிட்டன. என்னைக் கண்ட பலர், ஏனப்பா! முன் ஆச்சாரியார் வந்தபோது கறுப்புக் கொடி பிடித்தீர். ஜெயிலுக்கும் போனீர்கள். இப்பொழுது என்ன உங்கள் தலைவர் இகசியமாக சந்திக்கிறார் திருவண்ணாமலையில், என்று கேலி செய்தனர். நையாண்டி செய்தனர். நகைப்புக்கு இடமாக இருந்தது நிலைமை. இந்த நிலைமை தெளிவுபட, அதற்குப்பின் நான் அவரைச் சந்தித்தது அந்த மாநாட்டில் தான். திருவண்ணாமலையில் என்ன இரகசியம் பேசினீர்கள் என்று கேட்டேன. அதோடு நிற்கவில்லை, நடந்ததைச் சொல்வது, நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் கெடுதி என்று தோன்றினால், சொல்லத் தேவையில்லை, சொல்ல வேண்டாம் என்றும் அன்று, அங்கு, தெரிவித்திருக்கிறேன். சொல்லும்படி வற்புறுத்தவில்லை என்றும் கூறினேன்.
அறை கூவல் விடுத்துப் பார்க்கட்டும்
கோவையிலே பெரியார் பின்னர், தான் ஏதோ தீவிர திட்டத்தில் இறங்கப் போவதாகவும் தன்னைத்தானே முதல் பலியாக்கிக் கொள்ளப் போவதாகவும் தெரிவித்தார். இதைக் கேட்ட நான் பயந்தே போனேன். ஏன் அவர் பலியாக வேண்டும், கூடாதே, என்று நினைத்தேன். ஆனால் சமீபத்தில் பெரியார் திருச்சியில் பேசிய போக்கை பார்த்தவுடன், எனக்கு அன்று இருந்த பயம் நீங்கிவிட்டது. பெரியார் கூறியிருக்கிறார் திருச்சியில், நான் இன்னும் 10 ஆண்டுகளாவது வாழ விரும்புகிறேன். அதற்-
21