ஒட்டுமாஞ்செடி
காகத்தான் நான் திருமணம் என்கின்ற பேரால் ஒரு ஏற்பாடு, எனது வாழ்க்கைக்குத் துணை ஏற்படுத்திக் கொண்டேன் என்று பேசினார். அவர் நன்றாக வாழட்டும்! சீனக் கிழவரைப் போல, பர்மிய நாட்டு வயோதிகரைப் போல், துருக்கி நாட்டு பெரியாரைப் போல் வாழட்டும்! இன்னும் காந்தியார் வாழ விரும்பியபடி 125 வயது வரையில் வாழட்டும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் பணியைக் கண்களால் காணட்டும். அவர் கொள்கை, திட்டம், நம்மால் நல்ல முறையில் நிறைவேற்றப்படுகிறதைக் கண்டு களிக்கட்டும்! தவறு இருந்தால் திருத்தட்டும்! போகும் பாதை தவறு எனறால் சுட்டிக் காட்டட்டும்! ஆனால் வேலை செய்வதைத் தடுக்க வேண்டாம், பகை உணர்ச்சியை வளர்க்க வேண்டாம், திராவிட கழகத்துக்கும் — திராவிட முன்னேற்ற கழகத்துக்குமிடையே! நீங்கள் எப்படி வேலை செய்கிறீர்கள் என்று ஒரு challenge அறைகூவல் விடுத்துவிட்டு அவர் தம் வழி நடந்து கொண்டு போகட்டும்!
சமதர்மப் பூங்கா
திராவிடர் கழகமாகட்டும், திராவிட முன்னேற்ற கழகமாகட்டும், படை வரிசை வேறு வேறு என்றாலும் கொள்கை ஒன்றுதான், கோட்பாடு ஒன்று தான்; திட்டமும் வேறு வேறு அல்ல, என்ற நிலை இருந்தே தீரும். படை வரிசை இரண்டு பட்டுவிட்டது என்று எக்காளமிடும் வைதீகபுரிக்கும், வடநாட்டு ஏகாதிபத்தியத்துக்கும் சம்மட்டியாக விளங்கவேண்டும் இருகழகங்களும். இரு திக்குகளிலுமிருந்தும் வடநாட்டு ஏகாதிபத்தியத்தை ஒழித்து வைதீகக்காட்டை அழித்து சமதர்மப் பூங்காவாகத் திராவிடத்தைச் செழிக்கச் செய்தல் வேண்டும்.
அதிலே எந்த கழகம் பூங்கா அமைத்தாலும் அதில் பூக்கும் புஷ்பங்கள், காய்கள் கனிகள் திராவிடத்தின் எழுச்சியை, மலர்ச்சியை, மகிழ்ச்சியைத்தான் குறிக்கும். இரு பூங்காவும் தேவை. ஒன்றோடொன்று பகைக்கத்
22