ஒட்டுமாஞ்செடி
தேவையில்லை. அவசியமுமில்லை. எது புஷ்பித்தாலும் மாலையாகப் போவது திராவிடத்துக்குதான் என்ற நல்லெண்ணம் வேண்டும. அதை விட்டு நள்ளிரவிலே பூங்காவின் வேலி தாண்டி பாத்தியை அழிக்கும் வேலிதாண்டிகள் வளரக்கூடாது.
கொள்கையைப் பரப்புவதே பணி
இப்போது மழை வந்தது. சிறிது நேரம் சங்கடமாகத்தான் இருந்தது. இப்போது மழை நின்றிருக்கிறது. மழை பெய்ததற்கு முன்பு இருந்த வெப்பம் மாறி குளிர்ந்த காற்று வீசுகிறது. மெல்லிய மேகம் பரவி அழகளிக்கிறது.
மழை பெய்து நின்று கறுத்த வானம் வெளுத்திருப்பது போல இன்று புதுக்கழகம் அமைத்து முன்னேற்ற வேகத்துடன் மோதுதல் இன்றிப் பணியாற்றப் புறப்பட்டு விட்டன.
கொள்கையைப் பரப்புவதே நமது முதல் பணி. பகைமை உணர்ச்சியை அடியோடு விட்டொழிக்கவேண்டும். நான் உண்மையிலேயே கூறுகிறேன், நமது எழுத்தாளர் எவரும் கடுமையான நடையில் தாக்குவதைக் குறைத்து விடவேண்டும் இதனால் நமக்கு லாபமில்லை. பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள அத்தனை பேருககும் நஷ்டந்தான். திராவிட கழகத்தை நாம் தாக்கி, முன்னேற்றக் கழகத்தை அவர்கள் தாக்கி, அவர்கள் லாபத்துக்காகத்தான் வேலை செய்கிறார்கள் என்று நாம் கூற, இல்லை! இல்லை! அவர்கள் தான் சுயநலமிகள், லாப வேட்டைக்காரர்கள் என்று அவர்கள் ஏச, மக்கள் இவர்களுக்கும் லாபம்தான், குறிக்கோள், அவர்களுக்கும் லாபம்தான் குறிக்கோள, என்று கருதும் நிலை ஏற்பட்டுவிடும். எனவே தான் கூறுகிறேன்.
நம்மிடையே பகையுணர்ச்சி கூடாது. இதேசமயத்தில் கொள்கையை விட்டுக் கொடுக்கவும் கூடாது. பிரிவினை, பொருளாதார சீரழிவிலிருந்து மீட்சி, பழைமையிலிருந்து
23