ஒட்டுமாஞ்செடி
விடுதலை ஆகிய லட்சியங்களுக்காகவே உழைக்க வேண்டும்.
பாதை தவறிய தலைவரைப் புறக்கணித்தோம்
இவ்வளவு பேசுகிறாயே, பேதம் பேசுகிறாயே, பேதம் கூடாது, பிளவு கூடாது என்று! ஏன் நீங்கள் அங்கிருந்தே பணியாற்றக்கூடாது? விலகுவானேன்? வேறு கட்சி அமைப்பானேன்? என்று கேட்கத் தோன்றும். கேள்வி சரிதான். பாதை தவறிய தலைவரைப் புறக்கணித்தோம். தவறை தவறுதான் என்று எடுத்துரைத்தோம். அவரோடிருந்து பணியாற்ற முடியாத நிலைமையிலிருக்கிறோம். எவரிடமும் நம்பிக்கையில்லை என்ற இழி சொல்லையும், உதவாக்கரைகள் என்ற பழியையும், தூற்றலையும், ஏசுதலையும் சுமக்கும் பெரும்பாரம், பெருஞ்சுமை ஏற்பட்டுவிட்டது. இவைகளைத் தாங்கிக்கொண்டு அவரோடு ஒத்து வேலை செய்வது முடியாத காரியம். ஆகவே, விலகினோம் பெருந்தன்மையோடு வேறு அமைப்பில் பணியாற்றுகிறோம், லட்சியத்தை நிறைவேற்ற.
பொறாமை கிடையாது
எந்த அளவுக்கு வேலையைக் குறைத்துக் கொள்ளலாமோ அந்த அளவுக்குக் குறைத்துக் கொள்ளப் பிரியப்படுபவன் நான். அதுவே எனது சுபாவம். அப்படிப்பட்ட நான் விலகி, வேறு கட்சியில் தொண்டாற்றத் தொடங்கியிருக்கிறேன். காரணம், எனது நண்பர்கள், கழகத்தில் முக்கியப் பங்குகொண்டு தொண்டாற்றும் பெரும்பாலோர் பொது வாழ்விலேயே சலிப்புற்று, பொது வாழ்வையே விட்டு விலகும் அளவுக்குச் சென்றனர்.
பெரியாரின் திருமண ஏற்பாட்டைக் கண்டித்து 250 கழகங்கள் தீர்மானங்கள் நிறைவேற்றின, வேலை செய்ய முடியாது அவரோடு என்று! நிர்வாக அங்கத்தினர்களின் மிகப் பெரும்பான்மையோர் அவரோடு ஒத்துழைக்க முடி-
24