ஒட்டுமாஞ்செடி
யாது எனக் கூறிவிட்டனர். எல்லாப் பேச்சாளர்களும், எழுத்தாளர்களும் அவரோடு ஒத்துழையாமை செய்தனர். கழகப் பத்திரிகைகள் யாவும் அவரை ஆதரிக்கவில்லை.
பெரியாருக்கு வலது கை இடது கை என இருந்தவர்—பெரியாரின் முன்னோடிகள், பின்னே சென்றவர்கள்—உறவினர்களிலும் உற்றாராக இருந்தவர்கள்—உழைத்தவர்கள், உள்ளப் பண்பு மிக்கவர்கள், உற்சாகமுள்ளவர்கள் உணர்ச்சி மிக்கவர்கள், ஊருக்குத் தெரிந்தவர்கள், இவர்கள் யாவரும் பிரிந்தனர் அவரைவிட்டு! அவரோடு ஒத்துழைக்கவில்லை. காரணம் அவர் திருமண விஷயந்தான். மணியம்மையைப் பெரியார் திருமணம் செய்துகொண்ட விஷயம் திராவிட கழகம் இதுவரை சொல்லிவந்த கொள்கைகளுக்கு விரோதமாய் இருக்கிறது. திராவிடர் தலைகளைக் குனியவைக்கும்படி செய்திருக்கிறது என்பதைத் தவிர, இவ்விஷயத்தால் எனக்கோ மற்ற யாருக்கோ பொறாமை கிடையாது. நான் ஏன் இதில் பொறாமைப்பட வேண்டும்?
பெரியாரை மணந்துகொள்ள மனுப்போட்ட பெண்ணா நான், பொறாமைப்பட!
சம்பத்துக்குப் பரிந்துபேச அவசியமில்லை!
பெரியாருக்குச் சொந்தமான குடும்பச் சொத்துக்கள் இத்திருமணத்தின் காரணமாக சம்பத்துக்கே வராமல் போய்விடும். சம்பத்துக்காக நான் பரிந்து பேசுகிறேன், பெரியார்மீது துவேஷப் பிரசாரம் செய்கிறேன் என்று கூறுகிறார்களாம். உங்களுக்கு நான் ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். பெரியார் சொத்து விபரம் அதன் ஏற்பாடு உங்களில் பலருக்குத் தெரியாது. எனவேதான், அவர்களால் பேசமுடிகிறது இதுபோல. சட்ட நுணுக்கம் தெரியாதவனல்ல சம்பத்து! சொத்து விஷயத்தில் ஆசை இருந்தால் சம்பத்து மணியம்மையிடமே நயமாகப் பேசிப் பணம் வாங்கிக் கொள்ளத் தெரியாதா? சென்று பேச
25