ஒட்டுமாஞ்செடி
முடியாத நிலையிலே இருக்கிறாரா அம்மையார் ? சம்பத்தின் சின்னம்மாதானே. இப்போது அவரைச் சந்தோஷப்படுத்தி சலுகைகள் பெறத் தெரியாதவனா?
பின் ஏன் குடும்பத்தை, வீட்டைவிட்டு வெளியேறினான். அப்போது அவன்தான் விடுதலையின் மானேஜர். பெரியாரின் திருமணச் செய்தி கேட்ட அன்று, 18, 20 வயதுள்ள சுலோச்சனா சென்னை, பெரியார் வீட்டிலிருந்து தனது ஒன்றரை வயதுக் குழந்தையோடு தன்னந் தனியாக வெளியேறி ஈரோடு சென்றார்கள். மணியம்மை உள்ளே புகுந்தார். மருமகள் வெளியேறுகிறார். தேவையா? பெரியாரின் திருமணத்தால், அவருடைய குடும்பத்தினரும், உறவினரும் தலை குனிந்தனர். திராவிட கழகத்தினர் சகலரும் தலை குனிந்து தேம்பி அழுதனர். இந்த வெட்கக் கேட்டைத் தாங்க முடியவில்லை. மாற்றார் மனமகிழும் நிலை வந்தது. கல்கி போன்ற பத்திரிகைகள் கேலியும், கிண்டலும் செய்யுமளவுக்குச் சென்றனர். திராவிடர் கழகம் தன்னாலே அழிந்துவிடும் என்று கேலிச் சித்திரம் தீட்டுமளவுக்குக் கொண்டுபோய் விட்டது. இந்த நிலை வேண்டாம் என்று தான் இப்போது திராவிட முன்னேற்றக் கழகம் தனியாய், பெரியார் வகுத்துச் சென்ற அதே பாதையில் தீவிரமாய்ச் செல்ல முனைந்திருக்கிறது. இன்னும் அவருக்கும் எனக்கும் உள்ள பற்று, பாசம் அகலவில்லை; என்னை விடவில்லை; விட்டகுறை தொட்டகுறை போகவில்லை; நான் கேட்கிறேன், தோழர்களே! எது முக்கியம் நமக்கு? லட்சியமா? பெரியாரா? லட்சியம் தேவை. பெரியாரல்ல என்ற முடிவு செய்தோம். பிரச்சனை முடிந்தது. இதோ நம் கண் முன் வடநாட்டு ஏகாதிபத்தியம் மக்களைப் பாழ்படுத்தும் பாசிசம், பதுங்கிப் பாய நினைக்கும் பழமை இவைகள் தான் ஒழிய வேண்டும்.
மொழிப் பிரச்னைக்கு முடிவுகாண வேண்டாமா ?
தற்போது நம்மால் வெறுத்து ஒதுக்கப்பட்ட இந்தி டெல்லி அரசியல் நிர்ணயசபையிலே, அரசியல் திட்டத்-
26