உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒட்டுமாஞ்செடி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒட்டுமாஞ்செடி

திலே முக்கிய அங்கமாக ஏற்பட்டுவிட்டது. நிலைமை என்ன இப்போது ? இந்தி கூடாது என்று கூறினோம். குற்றமென்று கைது செய்தனர். இனி அரசியல் திட்டத்துக்கே விரோதி. நாட்டுக்கே துரோகி என்று குற்றஞ்சாட்டக்கூடும். அந்த நிலையிலே வடநாட்டு ஏகாதிபத்தியம் தன்னைத்தான் பலப்படுத்திக்கொண்டு முன்னேறுகிறது. மூன்று மொழிகளை நாம் சுமக்க வேண்டிய பெரும்பாரம் நமக்கு ஏற்பட்டுவிட்டது. இந்தி நுழைவுக்குப் புதிய பலம், புதிய பாதுகாப்புத் தரப்பட்டுவிட்டது டெல்லி சர்க்காரால். இங்குள்ள மக்களின் நிலையை, நாட்டத்தை நாம் அறிவிக்கவேண்டும் அரசாங்கத்துக்கு.

அறிவுப் புரட்சிக்கு எதிர்ப் புரட்சி !

மற்றோர் புறம் பழமையும் வைதீகமும் காலட்சேபம், கதர்ப்பிரசங்கம் என்ற முறையிலே நாட்டிலே தமது பிடியை பலப்படுத்திக்கொள்ள வேலை செய்து வருகின்றன. சனிக்கிழமை "ஹிந்து" பத்திரிகையை எடுத்துப் பாருங்கள்! எத்தனையெத்தனை கதாப்பிரசங்கங்கள், காலட்சேபங்கள், பழமைக்குப் பக்கபலம் தேட, வைதீகத்தை வாழ வைக்க! அறிவுப் புரட்சிக்கு எதிர் புரட்சி செய்கின்றன? சாமேத விளககம், அதர்வண விளக்கம், உபநிஷத்து உபான்யாசம், கீதாபதேசம், தேவார திருவாசக பாராயணங்கள், நாயன்மார் ஆள்வார் புராணங்கள் இப்படிப் பழமை தனது பிடியைப் பலமாக இறுக்கிக்கொண்டு போகிறது. இந்த நாட்டுப் பாசீசம் இதற்குப் பக்கபலமாக நிற்கிறது. பழமையும் பாசீசமும் ஒன்றோடொன்று இணைந்து பகுத்தறிவுப் பாசறையைப் பாழ்படுத்தித் தவிடுபொடியாக்கத் திட்டமிடுகின்றன. நிலைமையை நன்கு பயன்படுத்தத் திட்டமிடுகின்றன. இந்த நிலையிலே நாம் பொறுப்புணர்ச்சியோடு இலட்சிய நோக்கோடு நடந்துகொள்ள வேண்டும். நாம் புரியும் பிரச்சாரம் பத்திரிகைகளிலே வராது, பழமைக்கு ஆதரவுதேடும் பணியில் அவைகள் முனைந்துள்ளன என்ற காரணத்தால். நம்மிடையிலே கலகம் என்றால் விளம்பரம் செய்வர் பத்தி

27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒட்டுமாஞ்செடி.pdf/26&oldid=1854285" இலிருந்து மீள்விக்கப்பட்டது