உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒட்டுமாஞ்செடி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒட்டுமாஞ்செடி

பத்தியாக! நேற்று நடந்த நிர்வாகக் கமிட்டி உறுப்பினர் கூட்டத்தைப் பற்றி 'இந்து' பத்திரிகை வெளியிட்ட முறையைப் பாருஙகள். Split in Dravida Kazhagam திராவிடர் கழகத்திலே பிளவு என்று தலைப்புக் கொடுத்து சேதி போடுகிறது. நிர்வாக உறுப்பினர் கூட்டம் என்று சொன்னால் கமிட்டிக் கூட்டம்போட என்று போட்டுக் காட்டுகிறது. பேதம், பிளவு அதிகமாக வழி வகுக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றியது என்ற சேதிபோதும் என்றேன். போட்டதா அப்படியே? இல்லை! இது ஒரு சிறு 'சாம்பிள்' மாதிரி. நான் பெரியாரை குறை கூறினால் பத்தியாக ஆறுகாலம் தலைப்புடன் வரும். பெரியார் என்னை ஏசினால் பக்கம் பக்கமாக வரும். ஏன்? இருவரையும் பொது மக்கள்முன் அயோக்கியர்கள், சுயநலமிகள் என்று எண்ணுமபடி செய்யத்தான். இதனால் யாருக்கு லாபம்? என்பது எங்களுக்குத் தெரியாதா? நாங்கள் என்ன, புராணங்கள் படிக்காதவர்களா? "குருக்ஷேத்திரம்" ஏற்பட்டால், கண்ணணுக்குத்தான் லாபம் என்பது எப்படி எங்களுக்குத் தெரியாமல் போய்விடும்! மோதுதல் யாருக்குப் பயன்படும் என்பது தெரிந்துதான் செயலாற்றுகிறோம், தனியாக, தனி அமைப்பின்கீழ்.

ஓயமாட்டோம் உழைப்போம்!

பழமையும் பாசீசமும் முறியடிக்கப்படும் வரை ஓயமாட்டோம், உழைப்போம், உருவான பலனைக்காண்போம். அப்போது பெரியார் "பயல்கள் பரவாயில்லை" உருவான வேலைதான் செயகிறார்கள் என்று உள்ளம் மகிழும் நிலை வரத்தான் போகிறது.

தூத்துக்குடி மாநாட்டுக்கு நான் போகவில்லை, ஒரு கேள்வித்தாள் சென்றது பெரியாருக்கு. "அண்ணா ஏன் வரவில்லை என்று". அதற்குப் பெரியார், "முத்தன் ஏன் வரவில்லை, அப்புறம் எம். எஸ். சுப்புலட்சுமி ஏன் வரவில்லை, சுந்தராம்பாள் ஏன் வரவில்லை, என்று கேட்பீர்கள் போலிருக்கிறதே" என்று அலட்சியமாகப் பதிலளித்தார்.

28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒட்டுமாஞ்செடி.pdf/27&oldid=1854286" இலிருந்து மீள்விக்கப்பட்டது