உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒட்டுமாஞ்செடி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒட்டுமாஞ்செடி

அதற்குப் பிறகு ஈரோடு மாநாட்டிலே "அண்ணா வந்திருக்கிறார், மகனிடம் பெட்டிச் சாவியைக் கொடுத்து விடுகிறேன்" என்று கூறும் நிலை வரத்தான் செய்தது. அவர் "சாவியைக் கொடுத்தேன்" என்று கூறினார். அந்தச் சாவி எந்தப் பூட்டுக்கும் பொருந்தாத சாவி. எனவே அது எந்தக் காரியத்துக்கும் உபயோகப்படவில்லை. ஆனாலும் தூத்துக்குடி மாறி ஈரோடு வந்ததுபோல இன்றுள்ள நிலை மாறத்தான் போகிறது என்ற உறுதியோடு, உற்சாகத்தோடு பணி புரிவோம். நாட்டிலே ஆற்றி வந்த நல்லறிவுப் பிரச்சாரத்தைத தொடர்ந்து நடத்துவோம்! பாசிசப் பழமையையும் நாட்டைப பாழ்படுத்தும் சக்திகளையும் எதிர்த்துப் போராடுவோம். நாட்டிலே இன்று 144 ஏராளம். புத்தகங்கள் பறிமுதல்! அச்சகங்களுக்கு ஜாமீன் தொகை ஓயவில்லை. குறையவில்லை. நேற்றுக்கூட நான் எழுதிய 'இலட்சிய வரலாறு' என்ற புத்தகத்தைப் பற்றிப் போலீஸார் அது என்ன? இது என்ன? என்று கேள்விமாரி பொழிந்தவண்ணம் இருந்தனர். வடநாட்டுப் பாசிசாதிக்கத்தை ஒழிக்கப் பாடுபடும் திராவிட மக்களைப் பழமைப் பிடியினின்றும் விடுபட விரும்பும் பகுத்தறிவுவாதிகளை என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்று சர்க்கார் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு புத்தகமாகப் பறிமுதல் செய்துகொண்டே போகிறார்கள். அடக்கு முறையைப் வீசிக்கொண்டே இருக்கிறார்கள். இவ்விஷயமாக வெகு சீக்கிரத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் தக்கதொரு நடவடிக்கையிலே ஈடுபடப்போகிறது. சர்க்கார் காணத்தான் போகிறார்கள்! சர்க்கார் பறிமுதல் செய்த புத்தகம் பகிரங்கமாக விற்பனை செய்யப்படும் சைனா பஜாரில்!

இரண்யன் நாடகம் ஆடுக!

'இலட்சியவரலாறு 6 அணா' 'இராவண காவியம் ரூ 6' ஆரியமாயை 6 அணா 'ஆசைத்தம்பி புத்தகம் நாலணா' என்று தொண்டர்கள் விலை கூறுவதைக் கேட்கத்தான் போகிறோம். இலட்சிய வரலாறு புத்தகம் இப்போது

29

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒட்டுமாஞ்செடி.pdf/28&oldid=1854288" இலிருந்து மீள்விக்கப்பட்டது