ஒட்டுமாஞ்செடி
கிடைக்காது, எப்பொழுதோ விற்றுத் தீர்ந்துவிட்டதால். "இலட்சிய வரலாறு" என்று கூறப்படும். முகப்பிலே மட்டும் "இலட்சிய வரலாறு" என்று இருக்கலாம். உள்ளே காலி காகிதம் வைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் விற்பர் இலட்சிய வரலாறு என்று கூறி, பறிமுதல் செய்யப்பட்ட புத்தகங்கள் அனைத்தும் இப்படித்தான் விற்கப்படப் போகின்றன! அப்போது இந்த சர்க்கார், என்ன செய்யப்போகிறது, எப்படி நடவடிக்கை எடுக்கப்போகிறது, எப்படி விளையாடப் போகிறது. பொதுமக்களும், பார்க்கத்தான் போகிறார்கள். இதேபோல் நமது இயக்க நாடகங்கள் தடை செய்யப்படுகின்றன சர்க்காரால். தகாத செயல்தான் இதுவும். தடை செய்யப்பட்ட நாடகங்களில் முதலாவதானது, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இயற்றிய இரணியன் அல்லது இணையற்றவீரன் என்பது.
திராவிட முன்னேற்றக் கழக முக்கியஸ்தர்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன். மன்றாடிக் கேட்கிறேன். அவர்களின் முக்கியவேலை, முதல்வேலை இந்த நாடகத்தை ஆங்காங்கு பொதுமக்கள்முன் நடத்திக்காட்டும் திட்டம் வகுக்கும்படி. இதற்கு நீங்கள் தயாரா? எத்தனைபேர் கைதூக்கிக் காட்டுங்கள் (கூட்டத்தினர் பெரும்பாலோர் கைகளும் உயர்ந்திருந்தன) எல்லோரும் கைதூக்கி விட்டீர்களே! இத்தனைபேரும் சென்றால் சர்க்கார் சிறையிலே இடமிருக்காதே! நமக்கும் திராவிடர் கழகத்துக்கும் பிளவு இல்லை, ஆனால் போட்டி உண்டு. போட்டி உணர்ச்சி உண்டு. தீவிரத்திலே அதாவது ஆங்கிலத்தில் கூறப்படும் Sportsmanship போட்டிஉணர்ச்சி, காரியம் ஆற்றும் திறமையிலே வேண்டும். இது கண்ணியத்தின் பெயரால், நாகரீகத்தின் பெயரால், நல்லறிவின் அடிப்படையில் ஏற்பட வேண்டும்.
புதுக் கழகம் ஒட்டுமாஞ்செடி
பகை உணர்ச்சியை வளர்த்து எதிரிகளுக்கு இடம் கொடுத்து ஏமாளிகளாகத் தேவையில்லை! நான் முன்னர் குறிப்பிட்டபடி 'கல்கி' பத்திரிகை, என்ன தைரியமாக
30