உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒட்டுமாஞ்செடி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒட்டுமாஞ்செடி

எவ்வளவு சந்தோஷமாகத் தீட்டியது காங்கிரசுக்கு எதிராக ஒரு கட்சியும் இல்லையென்று! இந்துமகாசபைக்கு ஒரு வேலையும் இல்லை; கம்யூனிஸ்டுகள் கலகக்காரர்கள், சமதர்மிகள் வெற்றிபெறமாட்டார்கள், திராவிட கழகத்தினர் தன்னாலேயே அழிந்துவிடுவர் என்று ஆரூடம் கூறியது. இது ஆத்திரத்தின மீது கட்டப்பட்ட ஆரூடம். ஆசையின் விளைவு அப்பனே! இதை விட்டுவிடு. மரம் அழியவில்லை. அதிலிருந்து ஒட்டுமாஞ்செடி தோன்றியிருக்கிறது. இதை வெட்டிவிட முடியாது. நான் திராவிடநாடு ஆரம்பித்த நேரத்திலே குடந்தையிலே ஒரு கூட்டத்தில் பேசினேன். அப்போது எனக்கு ஒரு கேள்வித்தாள் தரப்பட்டது. கேள்வி என்ன தெரியுமா? "குடியரசு" இருக்க நீ ஏன் திராவிடநாடு ஆரம்பிக்கிறாய், என்று கேட்கப்பட்டது. நான் பதில் கூறினேன். 'குடியரசு, இருக்கிறது அதே கருத்தை எடுத்துக்கூற ஒரு ஒட்டுமாஞ்செடி முளைத்திருக்கிறது காஞ்சீபுரத்தில், அதே கொள்கைகளைப்பரப்ப.

திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு ஒட்டுமாஞ்செடி தான். மண்வளம் ஏராளம். அதே பூமி, நீர்பாய்ச்சி, பதப்படுத்த, பாத்திகட்ட முன்னிற்போர் பலர். ஒட்டுமாஞ்செடி பூத்துக் காய்த்து கனிகுலுங்கும் நாள் விரைவில் வந்தே தீரும்! இதனால் ஒட்டுமாஞ்செடி மாமரத்துக்கு விரோதமல்ல. திராவிட கழகத்துக்கு முரணானது அல்ல. ஒத்த கருத்துக்கொண்டதே, ஒட்டுமாஞ்செடி!

பெரியார் அளித்த பயிற்சி

நம்மிடம் பணம் இல்லை. "இந்தப் பயல்களிடம் பணம் ஏது, கொஞ்ச நாட்களுக்குக் கூச்சல் போட்டு அடங்கி விடுவார்கள். பணம் இல்லாமல் என்ன செய்யமுடியும்?" என்று பேசப்படுகிறதாம். அதே நேரத்தில் பணம் சம்பாதிக்கிறான், சினிமாவுக்குக் கதை எழுதுகிறான், நாடகமாடுகிறான் நல்ல பணம் சமபாதிக்கிறான், என்று தூற்றப்படுகிறேன் நான்! இந்த இருவகைப் பேச்சுக்களையும்

31

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒட்டுமாஞ்செடி.pdf/30&oldid=1854290" இலிருந்து மீள்விக்கப்பட்டது