ஒட்டுமாஞ்செடி
காணும்போழுது, நான் உண்மையிலேயே மகிழ்கிறேன். நம்மிடம் பணம் இல்லை கட்சி நடத்த, ஆனாலும் வழி வகை இருக்கிறது, பணம் சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கை தோன்றுகிறது. நான் சம்பாதித்தது உண்மையோ, பொய்யோ அதுபற்றிக் கவலையின்றி அதை அப்படியே ஏற்று, அந்த வழியைக் கடைப்பிடித்தேனும் பணம் சம்பாதித்துக் கட்சி நடத்தலாம் என்ற தைரியம் பிறக்கிறது. பணம் என்பது ஒரு சாதனமே ஒழிய அது சகல காரியங்களுக்கும் அத்தியாவசியமான ஒன்றல்ல. இருந்தே தீரவேண்டும், எல்லா காரியங்களுக்கும் என்ற நிர்ப்பந்தம் தேவையில்லை. நமது உழைப்பின மூலம், உறுதியின் மூலம் எவ்வளவோ பணத்தேவையைத் தவிர்க்கலாம் குறைக்க முடியும்.
முக்கியமாக, முதல் வேலையாக எழுத்துரிமை, பேச்சுரிமை எதையும் அடக்கும் சர்க்கார் போக்கை எதிர்த்து போரிட திராவிட முன்னேற்றக் கழகம் முண்ணணிப்படை வரிசை அமைக்கவேண்டும். அதில் பங்குகொள்ள சமதர்மத்தோழர்களை, வாருங்கள் என்று வரவேற்கிறேன், கம்யூனிஸ்டுகளை ஒத்துழையுங்கள் என்று கூப்பிடுகிறேன்.
பேச்சுரிமையைப் பறிக்காதே, புத்தகங்களைப் பறிமுதல் செய்யாதே என்று போரிடுவோம்! பெரியாரே! நீரளித்த பயிற்சி பக்குவம் பெற்ற நாங்கள் உம் வழியே சர்க்காரை எதிர்த்து சிறைச்சாலை செல்லத்தான் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். துவக்க நாளாகிய இன்றே!
இன்றைய திராவிட முன்னேற்றக் கழகத் துவக்க விழாவிலே இத்தனை பேரும் கூட்டமாகக்கூடி, மழையையும் பொருட்படுத்தாமல், நின்று பேராதரவு தந்த பெருமக்களே! உங்களுக்கு எனது நன்றி. துவக்க விழாவிலே நான் உங்களுக்கு விடும் வேண்டுகோள். எழுத்துரிமை பேச்சுரிமை காக்கவாரீர், என்ற போர்ப்பரணிதான். விரைவில் அந்த நாள் வந்தேதீரும். காத்திருங்கள் அழைப்பு விரைவில் வரும்.
★
32