இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அன்புள்ள தோழர்களே !
பல நாட்களுக்குப் பின்னர் கூடியிருக்கிறோம். இக்கூட்டம் நமது நோக்கத்தைத் தெரிவிக்கக் கூடிய கூட்டமாகும், மழையோ பலமாகப் பெய்கிறது; வந்திருக்கும் கூட்டமோ ஏராளம்; பேச இருப்போரும் பலர். பல மாவட்டங்களிலிருந்தும் வந்துள்ள தோழர்கள், இயக்கத்தின் முக்கிய பணியிலே ஈடுபட்டுள்ளவர்கள், அவர்கள், யாவரும் பேச இருக்கிறார்கள். மழை பலமாகப் பெய்து கொண்டிருக்கிறது; பலர் பேச வேண்டும், சற்று சங்கடமான நிலை தான். அடாத மழை பெய்கிறது; அளவற்ற கூட்டம். தாய்மார்களும் தவிக்கின்றனர் மழையால். நின்று கொண்டேயிருக்கின்றீர்கள்; சங்கடம் தான். ஆனாலும் சமாளிக்கிறீர்கள். இது போன்ற நிலைதான் நாட்டிலே சில காலம் கழகத்தின் வேலைகள் செயலற்றுக்கிடந்து, சங்கட-
5