உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒட்டுமாஞ்செடி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒட்டுமாஞ்செடி

மான நிலை ஏற்பட்டது; சரி செய்தோம். திராவிட முன்னேற்ற கழகம் தோன்றியது. புதிய அமைப்பு ஏற்பட்டு விட்டது. திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பேரால், ஏன் ஏற்பட்டது, எதற்காக ஏற்படுத்தப்பட்டது என்பதை விளக்கும் கூட்டமே இது.

நானா காரணம் ?

நான் தான் காரணம் இந்த நிலைக்கு—ஏற்பாட்டிற்கு—என்று கூறுவர் சிலர். நான் பேசுகிறேன் இப்போது; நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்; பலத்த மழை கொட்டிக்கொண்டிருக்கிறது, இப்போது; நனைகிறீர்கள். இதற்கு நானா பொறுப்பாளி? நானா மழையை வரவேற்கிறேன்; வருவித்தேன். இல்லை! மழை வரவும், அதனால் சங்கட நிலை ஏற்படவும் இன்று, இப்போது நான் எப்படிப் பொறுப்பாளியல்லவோ, அப்படி தான், கழகத்தில் ஏற்பட்ட மந்த நிலைக்கும் நான் பொறுப்பாளியல்ல. மழைக்கு நான் பொறுப்பாளியல்ல வென்றாலும், என்ன ஏசுவர் கூட்டத்திற்கு வந்துள்ள மக்கள், தாய்மார்கள்? "என்னப்பா அந்த அண்ணாதுரை கூட்டத்திற்குப் போனேன், ஓரே மழை, நன்றாக நனைந்து விட்டேன். நீர் சொட்டக் சொட்டக் கேட்டுக் கொண்டிருந்தேன் " என்று தான் பேசுவர்.

கூறியது குற்றமா?

நான் என்ன செய்துவிட்டேன்; தலைவர் தவறினார் கொள்கையினின்றும், பகுத்தறிவுப் பாதையினின்றும்; தவறு என்று மனதார நம்பினேன்; தெரிவித்தது குற்றமா?

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒட்டுமாஞ்செடி.pdf/5&oldid=1853707" இலிருந்து மீள்விக்கப்பட்டது