உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒட்டுமாஞ்செடி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒட்டுமாஞ்செடி

மனப் புண் ஆறவில்லை!

பெரியார் சமாதானம் சொல்லிவிட்டார், என் சொந்த விஷயம்; எதிர்ப்போர், சுயநலமிகள்; சதிக்கூட்டத்தினர், என்று. மனப்புண் ஆறவில்லை மக்களுக்கு அப்படிப்பட்ட தலைவருடன் கலந்து பணியாற்ற மாட்டோம் என்று கூறினர். செவி சாய்க்கவில்லை, தலைவர் விலகுவார் என எதிர்ப்பார்த்தனர்; விலகவுமில்லை தலைவர். அவரோடு சேர்ந்து பணிபுரிய முடியாத நிலையிலுள்ள மிகப் பெரும்பான்மையினர், கழக முக்கியஸ்தர்கள், கூடிப்பேசினர்; ஒரு முடிவு செய்தனர்; அந்த முடிவு தான் "திராவிட முன்னேற்றக் கழகத்" தோற்றம்.

போட்டிக் கழகமல்ல!

திராவிட முன்னேற்றக்கழகம் தோன்றி விட்டது; திராவிட கழகத்திற்குப் போட்டியாக அல்ல, அதே கொள்கைப்பாதையில் தான், திராவிடர் கழகத்தின் அடிப்படைக் கொள்கைகளின் மீதே தான், திராவிட முன்னேற்றக் கழகம் அமைக்கப் பட்டுள்ளது அடிப்படைக் கொள்கைகளில், கருத்துக்களில் மாறுதல், மோதுதல் எதுவும் கிடையாது. சமுதாயத்துறையிலே சீர்திருத்தம், பொருளாதாரத்துறையிலே சமதர்மக் குறிக்கோள், அரசியலில் வடநாட்டு ஏகாதிபத்தியத்தினின்றும் விடுதலை, ஆகிய கொள்கைகள் தான், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்பாடுகளாகும்.

வேலை செய்ய மனம் ஒப்பவில்லை

கொள்கைக்கே புறம்பாக, ஜன நாயகத்திற்கே அப்-

8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒட்டுமாஞ்செடி.pdf/7&oldid=1854028" இலிருந்து மீள்விக்கப்பட்டது