ஒட்டுமாஞ்செடி
கொள்கைக்காகவே விலகினோம்
கொள்கை பிடிக்காமலோ, கோணல் புத்தி படைத்தோ, அல்ல நாங்கள் விலகியது, வெளியேறியது; கொள்கை வேண்டும், அதுவும் நல்லமுறையில் நடத்தப்படவேண்டும்; நாடும் மக்களும் நலம் பெறும் முறையில் கொள்கைக்குக் குந்தகம் விளைவிக்கும் காரியத்திற்குப் பக்கபலமாக இருந்து, பணியாற்ற முடியாது; என்ற நிர்ப்பந்த நிலையிலேதான் விலகினோம், விலகநேரிட்டது. பெருந்தன்மை வேண்டும் என்ற ஒரே காரணத்தினால் தான் மோதுதலைத்தவிர்த்து, கழகத்தைக் கைப்பற்றும் பணியை விடுத்து விலகினோம், அதுமட்டுமல்லாமல், தலைவர் எல்லோர் மீதும் நம்பிக்கையில்லை, நம்ப முடியாது, என்று வேறு கூறியிருக்கிறார். சோம்பேறிகள், செயலாற்ற முடியாத சிறுவர் கூட்டம்; உழைக்கத் தெரியாதவர்கள், என்று குற்றம் சாட்டியிருக்கிறார்! யாரைப் பார்த்து? உழைத்து உழைத்துக் கட்சியைக் கழகத்தை உருவாக்கிய உண்மைத் தொண்டர்களை, நிர்வாக உறுப்பினர்களை, தம் வாழ்வையும் பாழ்படுத்திக் கொண்ட இளைஞர்களைப் பார்த்து!
திறத்தைக் காட்டுவோம்!
ஒரு குடும்பத் தலைவன் சதா தன் மக்களில் சிலரைப் பார்த்து, "நீ சோம்பேறி, வேலைக்கு லாயக்கற்றவன், வீணன், என்று தூற்றிக்கொண்டே இருந்தால், மகன் நிலை என்னவாகும்? உண்மையிலேயே உழைக்கும் மகன் உள்ளம் உடைந்து தானே போவான். அது மட்டுமா?
10