பக்கம்:ஒத்தை வீடு.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 ஒத்தை வீடு நானும் இருக்கேன் டாக்டர். நோ மிஸ்டர் மனோகர். ஸாரி. இன்னும் ஒரு வாரத்திற்கு நீங்க அவளைப் பார்க்கக்கூடாது... நாங்க ஒங்க ஒய்பை அப்லர்வேஷன்ல வச்சிருக்கோம். எப்போ பார்க்கச் சொல்றோமோ. அப்பப் பார்த்தால் போதும். இந்தாம்மா. பெரியம்மா. வீட்டுக்குப்போய் எவ்வளவு அழனுமோ. அவ்வளவு அழு. இனிமேலாவது யாரையும் அழவைக்காதே. இல்லாட்டி ஒனக்கும். மிஸ்டர் மனோகர் என்னோட வாங்க. அந்த அறைக்குள் முண்டியடித்த சொர்ணம்மாவை, காந்தாமணி இழுத்துக்கொண்டு போனாள். மனோகர், மாமனாரின், மடித்து வைத்த கரங்களில், லேசாய் பிடித்து அழுத்திவிட்டு, டாக்டரோடு போனான். கூடவே அவனைச் சாடிய அந்தப் பெண்ணும் போனாள். அந்த அறையில் சுழல் நாற்காலியில் மேலே கதிர் விரிந்த சூரியப் படம். எதிர்ச் சுவரில் வட்டங்களை உள்ளடக்கிய பெருவட்டப் படம். அதன் மையத்தில் ஒரு புள்ளி. அதற்குக் கீழே மெத்தையிட்ட கட்டில். "இப்போ என் ஒப்புக்கு எப்படி இருக்கு டாக்டர்." "ஒய்ப் இருக்கட்டும். ஒங்களுக்கு இப்ப எப்படி இருக்குது. நோயின்னு அனுமானித்தால், அது ஒங்களுக்குத்தான். ஒங்க ஒய்புக்கு இருக்கிறது அதோட அறிகுறிகள். ஒங்களுக்கு மனக்காய்ச்சல். அந்தப் பெண்ணுக்கு நெறி கட்டியிருக்கு. அந்தப் பொண்ணு கிட்டே பேசிப் பார்த்தோம். ஒங்க செக்ஸ்லைப் பற்றி சொன்னாங்க. ஏன் அப்படிப் பார்க்கறீங்க. டாக்டர்களான நாங்க தாயுமானவங்க. ஒடம்போட நிர்வாணம் மட்டுமில்லே. மனசோட நிர்வாணமும் எங்களுக்குத்தான் தெரியும்." அந்தப் பெண், இடைமறித்தாள். சூரியகாந்திப் பூ நிறம். அதன் விதை போலவே கன்னத்தில் ஒரு மச்சம். "ஆனால் உங்களுக்கு இவ்வளவு ஆணாதிக்கம் கூடாது சார். அந்த ஆர்டரை எப்படி சார் கிழிச்சுப் போடலாம்?. பெண்டாட்டின்னா அடிமையா. பக்கத்து வீட்டுக்காரன் ஏடாகூடமாப்பேசினான்னு அவனக் கேட்காதகேள்வியைகேட்டிட்டு திரும்பிவரும்போது, நீங்கஒரு கணவன், கேட்கக்கூடாத கேள்வியைக் கேட்கலாமா? ஒரு கேள்விமுறை இல்லையா? என்ன அர்த்தம்? கற்புப் பெருமிதத்தோட வந்த மனைவியை. நீங்களே மானசீகமா, அதே மனிதனை கற்பழிக்கச் செய்தீங்க.. ஆனாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/103&oldid=762154" இலிருந்து மீள்விக்கப்பட்டது