பக்கம்:ஒத்தை வீடு.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£2 உள்ளே வந்து உட்காராமல் நின்ற மனோகரை, டாக்டர் சந்திரசேகரன் ஆச்சரியமாகப் பார்த்தார். சொன்னபடி, எழுதிக் கொடுத்ததுபோல், குறிப்பிட்ட நாளில், குறித்த நேரத்தில் வந்துவிட்டான். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதும், நேரம் தவறாமையும் நல்ல பழக்கங்கள் மட்டுமல்ல. பண்பாடுங்கூட. தன்னை மையமாக வைத்துச் சுழலாமல், பிறர் நலத்தையும் பேணும் ஆரோக்கியமான அணுகுமுறை. இதுவே மனநலத்திற்கு முக்கியமான காரணி. இவன் தேறிடுவான். "உட்காருங்க மிஸ்டர் மனோகர்! ஏன் கிழவர் மாதிரி சாய்ந்து இருக்கீங்க? நிமிர்ந்து, நேரா உட்காருங்க... மனம் எப்படி புற வெளிப்பாடுகளைத் தோற்றுவிக்குதோ... அப்படி புற வெளிப்பாடுகளும் அகத்தை செப்பனிடும்." மனோகர், நாற்காலியின் பின்பக்கம் சாய்த்துப் போட்ட முதுகை திமிர்த்தினான். அதன் சட்டங்களில் கிடந்த கரங்களைத் துக்கி, வயிற்றுக்கு அணையாய்ப் போட்டான். இதற்குள் டாக்டர், ரேக்கில் இருந்து ஒரு பைலை எடுத்தார். அதன் இரண்டு நீல உறைகளை அகலப்படுத்தி, அவற்றின் இடைவெளிக்குள் கிடந்த காகிதங்களைப் புரட்டினார். அத்தனையும் மனோகர் எழுதிக் கொடுத்தவை. அவற்றை, அவர் ஆழ்ந்து படித்திருக்கிறார் என்பதற்கு அத்தாட்சியாக, ஆங்காங்கே பச்சைக் கோடுகள் போடப் பட்டிருந்தன. பக்கவாட்டில் சின்னச் சின்ன குறிப்புக்கள். டாக்டர் சந்திரசேகரன், அவனை ஏறிட்டுப் பார்த்தார். அவனது நேர் கொண்ட தோரணையைப் பார்த்து, சுயச் சிரிப்பாய்ச் சிரித்து விட்டு, நாற்காலியில் படுக்க வைத்த தனது உடம்பை நிமிர்த்தினார். பிறகு, காகிதக் கத்தைகளுக்குள் கண்களைப் படர விட்டபடியே கேட்டார். "நீங்க எழுத்தாளரா. மனோகர்?" "நான் கெட்ட கேட்டுக்கு." "லுக் மிஸ்டர் மனோகர்! உலகில் உள்ள சகல உயிரினங்களுக்கும், நாம் அனுதாபப்படலாம்; படனும் ஆனால், நமக்கு நாமே அனுதாபப்படுகிற ஒரு சுய அனுதாபம், ஒரு மனங்கொல்லி நோய். நான் நிசமாத்தான் சொன்னேன். மனோயியல் நிபுணர்கள் நல்லதுக்காக நடிக்கிறவர்கள் என்று ஒரு கருத்து இருக்குது. பாவலா செய்யுறவங்க என்றும் ஒரு எண்ணம் இருக்குது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/105&oldid=762156" இலிருந்து மீள்விக்கப்பட்டது